தயிரை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்?
தயிர் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான உணவாக இருக்கிறது. இதனை நாம் சாதத்தில் கலந்தும், ரைத்தாவாகவும், மோர் லஸ்ஸி என பல வகைகளில் எடுத்துக் கொள்கிறோம். மேலும், புரோபயாடிக் (Probiotics) சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த தயிர் நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமானத்தை எளிதாக்குகிறது.
மேலும், இதைத் தவிர பாதுகாப்பதற்கு பலரும் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதுண்டு. ஆனால், ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடிய தயிர் கெட்டுப்போகாதா? எத்தனை நாட்கள் பாதுகாப்பாக இருக்கும் போன்ற பல்வேறு கேள்விகள் நமக்கு வருகிறது. அதை பற்றி பார்ப்போம்.

பிரிட்ஜில் வைப்பதால் தயிர் கெட்டுப்போவதை தடுக்க முடியுமா?
பொதுவாக, நம்மில் பலரும் தயிரை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அது கெட்டுப் போகாது என்று எண்ணுவதுண்டு. உண்மையில் குளிர்சாதன பெட்டி பாக்டீரியாக்கள் உடைய செயல்பாட்டை மெதுவாக்குமே தவிர்த்து அதை முழுமையாக தடுத்து நிறுத்துவதில்லை.
Egypt National Research Centre வெளியிட்ட ஆய்வின்படி, "பிரிட்ஜில் வைக்கப்படும் அதனுடைய அமிலத்தன்மை மற்றும் நுண்ணுயிர் தரத்தில் படிப்படியான மாற்றங்களை சந்திக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் குளிர் சாதன பெட்டியில் நாம் தயிரை வைத்திருந்தாலும் காலப்போக்கில் அதனுடைய சுவை பதம் மற்றும் சத்துக்கள் மாறுபடலாம் என்கிறார்கள்.

பிரிட்ஜில் தயிரை எவ்வளவு நாட்கள் வைக்கலாம்?
1. பாக்கெட் தயிர்:
கடைகளில் இருக்கக்கூடிய தயிர் ஒவ்வொன்றுக்கும் காலாவதி தேதி குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த தேதிக்கு உட்பட்ட நாளில் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
2. வீட்டில் தயாரிக்கும் தயிர்:
வீடுகளில் தயாரிக்க கூடிய தயிரை மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் பயன்படுத்துவது மிக சிறப்பு. இது எந்த வகையான பால், உறை மோர் மற்றும் ஃப்ரிட்ஜின் வெப்ப நிலைகளை குறித்து மாறப்படுகிறது. சில நாட்கள் கடந்தாலும் வீட்டு தயிர் அளவுக்கு அதிகமாக புளித்து விடும். அதனால் வயிற்று உபாதைகளில் ஏற்படுத்தலாம்.
தயிரின் மேல் இருக்கும் தண்ணீர் கெட்டுவிட்டதற்கான அறிகுறியா?
குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடிய தயிரின் மேல் சேரும் தண்ணீரில் தான் 'Whey' எனப்படும் சத்துக்கள் உள்ளன. தண்ணீரில் புரோட்டின் வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன. இந்த தண்ணீர் நிற்பதால் தயிர் கெட்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. தயிரை சாப்பிடுவதற்கு முன்பாக இந்த நீரை நன்றாக கலந்து பிறகு சாப்பிடலாம். ஆனால், துர்நாற்றம் அடித்தால் அல்லது தயிரில் பூஞ்சை வளர்ந்திருந்தாலோ, உடனடியாக அகற்றி விடுவது அவசியம்.

தயிரை கெடாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்:
1. பிரிட்ஜ் உட்புற ஷெல்ப் தயிரை சேமித்து வைக்க வேண்டும். கதவு பகுதிகளில் வைப்பதே தவிர்ப்பதை நல்லது. கதவு அடிக்கடி திறக்கப்படுவதால் வெப்பநிலை மாறுபடலாம். இதனால் தயிர் சீக்கிரம் புளித்து விடும்.
2. தயிரை வெளியே எடுக்கும் போது சுத்தமான மற்றும் ஈரம் இல்லாத கரண்டியை பயன்படுத்துவது நல்லது. ஈரமான கரண்டிகள் தேவையில்லாத பாக்டீரியாக்களை உருவாக்கி தயிரை விரைவில் கெட்டுப் போக செய்யும்.
3. மேலும், காற்று புகாத இருக்குமான மூடியை கொண்ட பாத்திரங்களில் தயிரை வைக்க வேண்டும். இது பிரிட்ஜில் இருக்கக்கூடிய உணவுகளில் வாசனைகள் தயிரில் கலப்பதை தடுத்துவிடும்.
4. பிளாஸ்டிக் பாத்திரங்களுக்குப் பதிலாக மண் பானைகள், கண்ணாடிப் பாத்திரங்கள் அல்லது தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் தயிரை வைப்பது நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்கும்.
5. சில வீடுகளில் செய்யக்கூடிய தயிரில் சிறிய பச்சை மிளகாய் அல்லது தேங்காய் துண்டை போட்டு வைப்பது பார்க்கலாம். இது தயிர் அதிகமாக புளிப்பதை தடுப்பதோடு அதன் புத்துணர்வியைத் தக்கவைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

தயிர் கெட்டுபோனது என்பதை குறிக்கும் அறிகுறிகள் என்ன?
நிறம் மாற்றம்:
புதிய தயிர் நல்ல வெள்ளை அல்லது மங்கலான கிரீம் நிறத்தில் இருக்கும். அங்கு பச்சை அல்லது கருப்பு நிற புள்ளிகள் வந்தால் அங்கு பூஞ்சை அல்லது பாக்டீரியா வந்துவிட்டது என்று அர்த்தம்.
அதேபோல், தயிர் அதிகமாக வழவழப்பாக மாறினாலோ அல்லது திடீரென தண்ணீராக பிரிந்து கட்டிகட்டிகளாக மாறினாலோ அது கெட்டிருக்க வாய்ப்புள்ளது.
தயிர் இயற்கையாகவே லேசான புளிப்பு வாசனை கொண்டிருக்கும். அது அழுகிய வாசனை, ஆல்கஹால் வாசனை அல்லது தாங்க முடியாத நாற்றமடித்தால் உடனடியாக அகற்றி விடுவது நல்லது.
அறிய வேண்டியவை:
பிரிட்ஜில் வைக்கக்கூடிய தயிர் அதனுடைய ஆயுளை நீடிக்குமே தவிர என்றென்றும் கெடாமல் பாதுகாப்பதில்லை.