இந்த பழத்தின் விதைகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்குமாம்..! அது எந்த பழம் தெரியுமா?
நாவல் பழத்தின் பெருமையை சொல்லி மாளாது.
இன்று பெரும்பாலான மக்கள் அவதிப்படும் ஒரு கொடிய நோய்க்கு தீர்வாக இந்த பழம் இருக்கின்றது என்றால் அது எவ்வளவு அற்புதமான விஷயம் என எண்ணி பாருங்கள்.
இந்த பதிவில் நாவல் விதைகள் எவ்வாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது என்பதை பற்றி முழுமையாக அறிவோம்.
அற்புத நாவல் பழம்..!
இன்று பெரும்பாலான மக்கள் நம் பண்டைய உணவு முறையை மறந்தே போய்விட்டனர். இதன் விளைவு எண்ணற்ற நோய்களின் தாக்கத்தால் இடர்படுதலே. இதே போன்று சில பழங்களின் வகைகளையும் நாம் மறந்து போய்விட்டோம்.
அதில் நாவல் பழம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். நாவல் மிகவும் சத்துமிக்க பழமாகும். அதிக மருத்துவ குணங்களை இந்த பழங்கள் தனக்குள்ளே ஒளித்து வைத்துள்ளன.
மருத்துவ விதை..!
ஒரு சில பழங்களின் விதைகளுக்குள் மட்டுமே பல நன்மைகள் இருக்கும். அந்த வகையில் நாவல் விதை சற்றே உயர்ந்தது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றது.
பல ஆயுர்வேத மருத்துவத்திலும் இந்த விதையின் பெருமையை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்பதே முதன்மையான குறிப்பாகும்.
நீரிழிவும் நாவல் விதையும்...
- இந்த நாவல் விதையில் jamboline மற்றும் jambosine என்ற மூல பொருட்கள் உள்ளன.
- இதுதான் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது.
- குறிப்பாக இது இன்சுலின் அளவை உயர்த்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது. நாவல் பழத்தில் எந்த அளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றதோ அதே அளவு இதன் விதைகளிலும் காணப்படுகின்றது.
- எவ்வாறு அயல்நாட்டு மருத்துவத்தில் நாவல் விதையின் பெருமையை குறிப்பிட்டுள்ளனரோ அதே போன்று ஆயர்வேதத்திலும் பயன்படுத்து கின்றனர். இவை ஆயர்வேத மருத்துவத்தில் பிரதான இடத்தை பிடித்துள்ளது.
- இவை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு சிறுநீர் பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.
எச்சரிக்கை
இந்த நாவல் விதை எடுத்து கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
பொதுவாக எந்த ஒரு உணவையும் புதிதாக நீங்கள் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
மரபணு மாற்றம் பெற்ற நாவல் பழத்தை கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். - அத்துடன் கர்ப்பிணிகள் இந்த நாவலை சாப்பிடுதல் உகந்தது அல்ல.