வலியில் மனிதர்களை போல் எதிர்வினை புரியும் குரங்கு : வைரலாகும் பரிதாப காட்சி
தவறி விழுந்த குரங்கை மருத்துவம் செய்யும் பொழுது மனிதர்களை போல் எதிர்வினை புரியும் குரங்கு தொடர்பான காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே அனைத்து உயிர்களுக்கும் எப்படி உயிர் என்ற எண்ணக்கருவில் பாகுபாடு இல்லையோ அது போல் உணர்வுகளும் வலிகளும் கூட அனைத்து உயிர்களுக்கும் சமனானது தான்.
உயிரினங்களிலேயே மனிதனுக்கு மட்டும் தான் மற்ற உயிரினங்களையும் வாழ வைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மிகப்பெரும் கொடையாகும்.
சில வேளைகளில் மனிதன் மற்ற உயிரினங்களை வாழ வைத்தலில் அக்கறை காட்டுவது கிடையாது. இதற்கு காரணம் மனிதர்களின் தனித்துவ தன்மையை மனிதர்கள் புரிந்துக்கொள்ளாமையே ஆகும்.ஆதலால் வாழும் நாட்களில் உயிர்களிடத்தில் அன்பு உடையவர்களாக வாழ்ந்து அன்பினை பரப்புவது சிறந்தது.
அந்தவயைில் தவறி விழுந்த ஒரு குரங்கின் வலியை புரிந்துக்கொண்டு ஒருவர் மருத்துவம் செய்யும் பொழுது மனிதர்களை போல் எதிர்வினை செய்யும் குரங்கின் பரிதாபமான காட்சி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
எசக்கு புசக்காக தவறி விழுந்த அந்த குரங்கை மருத்துவம் செய்யும் பொழுது மனிதர்கள் எப்படி வலியை பிரதிபலிப்பார்களோ அப்படியே உள்ளது. pic.twitter.com/P9eeNClggQ
— ☆????☆ Mr vitalist (@im_inba1) July 2, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |