பட்டாணியை விரும்பி சாப்பிடுபவரா நீங்க? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக கோடைக்காலம் முடிந்து குளிர்க்காலத்திற்கு வரும் சில உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டிய ஒரு நிலை இருக்கின்றது.
இந்த காலக்கட்டத்தில் நாம் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பொருள் பட்டாணியாகும்.
இதனை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வதால் எடை இழப்பு முதல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு ஆகிய மாற்றங்களை உடலில் பார்க்கலாம்.
பார்ப்பதற்கு தானியம் போல் இருக்கும். இதனால் குழந்தைகள் அதிகமாக பட்டாணி விரும்பமாட்டார்கள். ஆனால் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டிய உணவுகளில் இது முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
அந்த வகையில் அப்படி பட்டாணியில் என்ன இருக்கின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
பட்டாணி சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. சமைத்த பச்சை பட்டாணி அரை கப்பில் 81 கலோரிகள் மற்றும் 0.4 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. இது எடையை அதிகரிக்காமல் இருக்க உதவியாக இருக்கின்றது.
2. பட்டாணியில் இருக்கும் கலோரிகள் புரதம் தசை திசுக்களை உருவாக்க மற்றும் சரிசெய்ய உதவியாக இருக்கின்றன.
3. அதிக எடை பிரச்சினையுள்ளவர்கள் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதனால் காலையில் கொஞ்சமாக பட்டாணி சாப்பிட வேண்டும். இது வயிற்றை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கின்றது. இதனால் பசி குறைக்கின்றது.
4.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செரிமான பிரச்சினையால் அதிகமாக அவஸ்தைப்பட்டிருப்பார்கள். பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு செரிமான கோளாறு இருக்காது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனின் பட்டாணியில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கின்றது.
5. பச்சை பட்டாணி வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே மற்றும் இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இருக்கின்றது. இதனால் உடல் எடை பாதுகாக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |