Fish Fry: கேரளா ஸ்டைலில் மீன் வறுவல்... எப்படி செய்றதுனு தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான மீன் வகைகளை எவ்வாறு கேரளா ஸ்டைலில் பொரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மத்தி மீன் - அரை கிலோ
எண்ணெய் - 4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன்
பூண்டு பொடி - அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சில்லி ப்ளாக்ஸ் - ஒரு ஸ்பூன்
புளி கரைசல் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும்.
அடுத்து மிளகாய் மற்றும் மஞ்சள் பொடி, பூண்டு பொடி இவற்றினை சேர்த்து கலந்துவிடவும். பின்பு வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கிவிடவும்.

பின்பு உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் சில்லி ப்ளாக்ஸ் சேர்த்து வதக்கிய பின்பு புளி கரைசலையும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
அதன் பின்பு கழுவி வைத்திருக்கும் மீன்களை தோசைகல்லில் சேர்த்து மசாலா அனைத்து இடத்திலும் வருமாறு செய்து நன்றாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் கேரளா ஸ்டைல் பொரித்த மீன் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |