கேரளா ஸ்டைல் முட்டைக்கறி... தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமான சைடிஷ்
அசைவ பிரியர்களுக்கு முட்டை குழம்பு கேரளா ஸ்டைலில் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அசைவ பிரியர்களுக்கு அதிகமாக பிடித்த உணவுகளில் ஒன்று தான் முட்டை ஆகும். முட்டையை விதவிதமாக சமைத்து சாப்பிடவும் செய்கின்றோம்.
முட்டை ஆம்லேட், ஆஃபாயில், குழம்பு, கிரேவி என வைத்து சாப்பிடும் நிலையில் கேரளா ஸ்டைலில் முட்டைக் கறி ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
புரோட்டா, தோசைகளுக்கு அட்டகாசமான சைடிஷாக இருக்கும் முட்டைக் கறி சற்று வித்தியாசமான முறையில் செய்யலாம்.

தேவையான பொருட்கள்
முட்டை - 4
கடுகு - ¼ டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 ½ டீஸ்பூன்
சீரகத் தூள் - ½ டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி நறுக்கியது - 1
திக்கான தேங்காய் பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

செய்முறை
பாத்திரம் ஒன்றில் தண்ணீர் சேர்த்து முட்டை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து தனியாக உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும், இஞ்சி, பூண்டு விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
கடாய் ஒன்றில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து வாணலியில் வதக்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், மல்லி தூள், கரம் மசாலா, சீரக தூள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

மசாலாவின் பச்சை வாசனை போன பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வேக விடவும். பின்பு தேங்காய் பால் சேர்த்து, நன்கு கொதி வந்ததும் வேக வைத்த முட்டையை சேர்த்து முட்டை உடையாமல் கிளறிவிடவும்.
கடைசியாக கிரேவி நன்கு கொதித்து திக்கான பதத்திற்கு வந்த பின்பு மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான முட்டைக்கறி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |