பாஸ் லேடியாக மாறணுமா? இந்த விடயங்களை நிச்சயம் கத்துக்கோங்க
பொதுவாகவே ஆண்களும் பெண்களும் சமன் என்று பேசினாலும் உலகளவில் பெரும்பாலும் தலைமைப்பதிவிகளில் இருப்பது ஆண்கள் தான்.
ஆனால் ஆண், பெண் இருவருக்குமே தலைமை வகிக்க வேணடும் என்பதில் அதிக ஆர்வம் இருக்கும். இருப்பினும் ஆண்களுக்கு தலைமைத்தும் எளிதில் கிடைத்துவிடுகின்றது.
பெண்களும் குடும்பத்தை தாண்டி தங்களின் தொழிலில் பிரகாசிக்க வேண்டும். அப்படி பெண்கள் தலைமை பதிவில் வகிக்க வேண்டும் என்றால் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமாக சில பழக்கங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
தலைமைத்துவத்தை அதிகரிக்கும் பழக்கங்கள்
தலைமைத்துவம் என்பது ஒரு சில நாட்களில் உருவாக்கிக்கொள்ளக்கூடிய பழக்கம் கிடையாது. நிர்ணயிக்கப்பட்ட கால வரையரைக்குள் ஒரு வேலையை செய்து முடிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பெண்கள் தலைமைத்துவ ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், குறிப்பாக தங்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்த ஒரு போதும் தயக்கம் காட்ட கூடாது.
அதாவது உங்களுக்கு பிடித்ததை மற்றவர்களுக்காக செய்யாமல் விடுவதையும் மற்றவர்களுக்கு பிடித்த விடயத்தை உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் செய்வதையும் முதலில் நிறுத்திவிட்டு நீங்கள் நீங்களாகவே இருப்பது மிகவும் முக்கியம்.
குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களை கட்டுபடுத்தும் பண்புகள் தலைமை வகிப்பதற்கு மிகவும் முக்கியமானது.
வாழ்க்கையில் நீங்கள் எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதாவது முதலில் இலக்கை குறி வைத்துவிட்டு தான் உழைக்க ஆரம்பிக்க வேண்டும். இது உங்களின் ஆற்றலையும் வேகத்தையும் அதிகரிக்கும்.
தலைமைத்துவ பண்புகளில் மிகவும் முக்கியானது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தான் சமூகத்தின் கருத்துக்களை காதில் வாங்காமல் நீங்கள் அடைய நினைத்த இலக்கை வெற்றிகொள்ள இந்த குணம் இன்றியமையாதது.
எப்போதும் மனநிலையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் புற சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு உடனடியாக துலங்களை காட்டாது உணர்வுகளை கட்டுப்படுத்தி, சிந்தித்து செயற்படும் தன்மை உங்களின் தலைமைத்துவ குணத்தை மேலும் உயர்த்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |