மற்றவர்கள் மீது நம்பிக்கை அற்ற 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் என தனித்துவமான குணங்களும், விசேட ஆளுமைகளும் இருக்கும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தங்களை தவிர யார் மீதும் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள்.
இப்படி எந்த நிலையிலும் மற்றவர்களை நம்ப மறுக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக நேர்மையும் அதே சமயம் சந்தேக குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் மற்றவர்களால் அதிக பாதிப்புக்களை தொடர்ந்து சந்திக் வேண்டியிருக்கும் இதனால், யார் மீதும் இவர்களுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்படாது.
இந்த ராசியினர் மிகவும் தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் பேச்சை விடவும் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
எந்த காரியத்திலும் தங்களை நம்பி மட்டுமே இறங்குவார்கள். இவர்களுடன் எத்தனை பேர் இருந்தாலும் இவர்களின் உதவியை ஒருபோதும் எதிர்ப்பார்க்கமாட்டார்கள்.
கன்னி
கன்னி ராசியினர் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பதால், எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை அதிகம் விரும்புவார்கள்.
ஆனால் இவர்கள் மற்றவர்களின் உதவியை அல்லது பணத்தை எதிர்பார்த்து காத்திருக்க மாட்டார்கள். இவர்களுளின் கடின உழைப்பின் மீது மட்டுமே அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
குழந்தை பருத்தில் இருந்து பெற்ற அனுபவங்கின் விளைவாக இவர்கள் பிற்காலத்தில் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை முற்றாகவே நிறுத்திவிடுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே நேர்மையானவர்களதனவும் துரோகிகளை கிட்டவே நெருங்கவிடக்கூடாது என்ற உறுதியாக குணம் கெண்டவர்கள்.
இவர்களுக்கு உலகில் யாரும் உண்மையானவர்கள் இல்லை என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். இதனால் இவர்களால் எளிதில் யாரையும் நம்ப முடியாது.
உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கின்ற போதிலும் மற்றவ்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பது இவர்களுக்கு பெரும் சவாலான விடயமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |