UPI (யுபிஐ) மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம்?
யுபிஐ பண பரிவர்த்தனையில் நாள் ஒன்றிற்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்ற தகவலை தற்போது தெரிந்து கொள்வோம்.
UPI ஆன்லைன் பரிவர்த்தனை
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் யுபிஐ (யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ்) மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போக்கு மிகவும் அதிகரித்துள்ளது.
தற்போது சிறிய பெட்டிக்கடைகளில் ஆரம்பித்து பெரிய பெரிய கடைகளிலும் இதனை பயன்படுத்துகின்றனர்.
இந்த பண பரிவர்த்தனை மூலம் நாள் ஒன்றிற்கு எவ்வளவு பணம் செலுத்தலாம் என்பது பெரும்பாலான மக்கள் தெரிந்திருக்க மாட்டார்கள்.
NPCI இன் படி, எந்தவொரு UPI பயனரும் ஒரு நாளில் எந்தவொரு நபருக்கும் ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்தலாம்.
அதே போன்று மூலதன சந்தை, காப்பீடு, வணிக பரிவர்த்தனை செய்பவர்களுக்கு யுபிஐ-யின் வரம்பு ரூ.2 லட்சம் ஆகும்.
ஐபிஓ புக்கிங் அல்லது ரிசர்வ் வங்கி சில்லறை நேரடித் திட்டத்தின் கீழ் பணம் செலுத்துவதற்கான யுபிஐ பரிவர்த்தனையின் வரம்பு ரூ.5 லட்சம்.
கல்வி, மருத்துவமனைக்கு எவ்வளவு?
இது மட்டுமின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து மருததுவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை வரம்பு 5 லட்சமாக உயர்த்தியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளதாக என்பிசிஐ தனது சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும் சரிபார்க்கப்பட்ட வணிகர்களுக்கும் இந்த வரம்பு கட்டாயம் பொருந்துமாம்.
நபருக்கு நபர் யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ஒரு லட்சம் ரூபாய், ஆனால் பல வங்கிகள் இதை அனுமதிப்பதில்லை. ஐசிஐசிஐ வங்கியின் இணையதளத்தின்படி, என்பிசிஐ நிர்ணயித்த அதிகபட்ச வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சம்.
மூன்றாம் தரப்பு பயன்பாடு வெறும் 24 மணி நேரத்திற்கு 10 பரிவர்த்தனை மட்டுமே செய்ய முடியும். ஆனால் அதிகமான பரிவர்த்தனைக்கு அடுத்த 24 மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |