நீரிழிவு நோயாளிகள் 2 ஏலக்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும்! யார் யாரெல்லாம் ஏலக்காய் டீ பருகலாம்?
நாம் தினமும் பயன்படுத்தக்கூடிய மசாலா வகைகளில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏலக்காயும் இஞ்சி குடும்பத்தைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. இரண்டிற்குமான ஆரோக்கிய நன்மைகள் ஒன்றாகவே இருக்கின்றன.
அப்படி என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.
BREAKING: திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி - புதிய கேப்டனாக ஜடேஜா தேர்வு!
- ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது.
- மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.
- பருவநிலை மாற்றத்தின்போது உண்டாகும் சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக இருக்கிறது.
- அதேபோல் மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் உதவுகிறது.
- அதோடு நோய் எதிர்ப்பு அழற்ச்சி, பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்பு, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் எந்த ஆரோக்கிய பாதிப்புகள் நேர்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.
- உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் கைக்கொடுக்கிறது.
- வாய் துர்நாற்றம், வாய் , பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏலக்காய் உதவுகிறது.
- வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சொத்தைப்பல் உருவாக்கத்தையும் தடுக்கிறது.
- பற்களின் ஈறுகளையும் வலுவாக்குகிறது.
- ஆண்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை அல்லது நீண்ட நேரம் செயல்பட முடியவில்லை எனில் அவர்களுக்கு இயற்கை வைத்தியங்களில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
- அவர்களின் செக்ஸ் மூடை தூண்டி செக்ஸ் வாழ்க்கையை இன்பமாக மாற்றுகிறது.
எனவே தினசரி ஏதாவதொரு வகையில் அல்லது தினசரி டீயில் கூட ஏலக்காயை தட்டிப்போட்டு குடித்துவர இத்தனை நன்மைகளைப் பெறலாம்.
எடை இழப்புக்கு ஏலக்காய் எப்படி உதவுகிறது?
- ஏலக்காய் மெலடோனின் ஒரு நல்ல ஆதாரமாகும். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பு எரியும் செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது, இது வேகமாக எடை இழக்க உதவுகிறது.
- பண்டைய காலங்களில், ஏலக்காயை சிறப்பான அல்லது ஆடம்பரமான உணவுக்குப் பிறகு வாய் புத்துணர்ச்சியாக வழங்குவதற்கான காரணம் இதுதான்.
- வயிற்றில் சுரக்கும் ஏலக்காயை மென்று பிறகு வெளியாகும் சாறுகள் செரிமானத்தை மேம்படுத்தவும் கொழுப்பு இழப்பை துரிதப்படுத்தவும் உதவியது.
- எனவே, நீங்கள் வேகமாக உடல் எடையை குறைக்க திட்டமிட்டால், 4-5 ஏலக்காய்களை ஒரு கிளாஸ் வெந்நீரில் போட்டு பெட் டைம் பானமாகச் சேர்த்து மாற்றத்தைக் காணவும்.
ஏலக்காய் நீரை குடிக்க விரும்பாதவர்கள் டீ தயாரித்தும் பருகலாம்.
ஏலக்காய் டீ செய்யும் முறை
தேவையான பொருட்கள்
- பால் - தேவையான அளவு
- தண்ணீர் - இரண்டு டம்ளர்
- ஏலக்காய் - இரண்டு
- சர்க்கரை - எட்டு தேக்கரண்டி
- டீ தூள் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை
பால், தண்ணீர் இரண்டையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும், ஏலக்காயை ஒரு பேப்பரில் வைத்து நன்கு தட்டி அதையும் சேர்த்து போட்டு கொதிக்க விட வேண்டும்.
பிறகு டீ தூள் போட்டு இறங்கியதும் அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிக்கட்டவும்.
சூடான மாலை நேரம் பிஸ்கேட், சுண்டலுடன் குடிக்கவும்.