உங்களது இரத்த வகை இதுவா? நீரிழிவு நோய் தாக்கும் ஜாக்கிரதை
நீரிழிவு என்பது ஒரு வாழ்க்கை முறை நோயாகும். நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு.
இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது ஆகியவை நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படை காரணம் ஆகும்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆய்வில் குறிப்பிட்ட இரத்த வகை இருப்பவர்களுக்கு சீக்கிரமாக சர்க்கரை நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி வாங்க எந்த இரத்த வகை சர்க்கரை நோய் வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பது குறித்து பார்க்கலாம்.
தோழி என்று கூறிய தனுஷிற்கு அடுத்தடுத்து பதிலடி கொடுக்கும் ஐஸ்வர்யா
நீரிழிவு நோய் தாக்கும் ரத்தவகை
O பிளட் குரூப் இருக்கும் பெண்களுடன் ஒப்பிடும்போது A பிளட் குரூப் கொண்ட பெண்கள் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்பு 10% அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், B ரத்த வகை கொண்ட பெண்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயம், O பிளட் குரூப் பெண்களை காட்டிலும், 21% அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது.
வான் வில்ப்ராண்ட் காரணி எனப்படும் இரத்தத்தில் உள்ள ஒரு புரதம் O ரத்தவகை அல்லாத நபர்களில் அதிகமாக உள்ளது. மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்துகிறது. இந்த ரத்த வகைகள் டைப்2 நீரிழிவு நோயுடன் தொடர்புடையதாக அறியப்படும்.
ஒருவர் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால் அது அவர்களின் உடல் சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் மற்றும் பயன்படுத்தும் முறையை பாதிக்கிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்துகிறது. இதற்கு சரியான சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கே ஆபத்தானதாக மாறிவிடும்.