வலிமைமிக்க எதிரியையும் எப்படி எளிமையான வெல்வது? சாணக்கியரின் வியூகம்
முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராகவும் திகழ்ந்து உலகம் முமுவதும் பிரசித்தி பெற்றவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதி வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளது. சாணக்கியர் அரசியலின் ராஜ தந்திரங்கள் குறித்தும் கற்றுதேர்ந்தவராக இருந்துள்ளார். இவருக்கு எதிகளை தந்திரமாக வீழ்த்துவது கைவந்த காலையாகவே இருந்துள்ளது.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவலின் பிரகாரம் எவ்வளவு பலம் வாய்ந்த எதிரியாக இருந்தாலும் சில வியூகங்களை கடைப்பிடித்தால் எளிமையாக வீழ்த்திவிடலாம் என்கின்றார்.
அதன் அடிப்படையில் எதிரிகளை எளிமையாக வீழ்த்துவதற்கு எவ்வாறான முறைமைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சாணக்கியரின் வியூகம்
சாணக்கியரின் கருத்துப்படி ஒருவர் உங்களுக்கு எதிரியாக மாறிவிட்டதை நீங்கள் உணர்ந்த பின்னர் அவசரப்பட்டு அவர்களுடன் நேரடியாக முறன்பாட்டுக்கு செல்வது தோல்வியையே கொடுக்கும் என்கின்றார்.
எதிரியை வெல்ல வேண்டும் என்றால் முதலில் எதிரி பற்றிய முழு விபரங்களையும் திரட்ட வேண்டியது அவசியம். எதிரியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து தெளிவாக தெரிந்திருந்தால் மட்டுமே எதிரியை வீழ்த்துவது சாத்தியம்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் எதிரியை நேரடியாக எதிர்க்கும் முன்னர் அதற்கு முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு நம்மை திறன் மற்றும் பலம் ரீதியாக வலுவாக்கிக்கொள்ள வேண்டும்.
எதிரியை வீழ்த்துவதற்கு சகலவிதமான ஏற்பாடுகளையும் செய்துவிட்ட போதிலும் கூட சரியான நேரம் வரும் வரையில் காத்திருக்க வேண்டியது அவசியம். தவறான நேரத்தில் எதிரியை நேரடியாக எதிர்க்க செல்வது ஆபத்தில் முடியலாம்.
சாணக்கியரின் கருத்துப்படி பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றுவது எதிரிகளை எளிமையாக அழிக்க துணைப்புரியும் என்கின்றார். எதிரி கூட்டத்துடன் இருக்கும் போது எரிர்ப்பது தோல்வியில் முடியலாம்.
ஒரு கூட்டணிணை எதிர்ப்பது முட்டாள்தனமான செயல் என்கின்றார் சாணக்கியர். மாறாக கூட்டணியை உடைக்க முயற்சிப்பது வெற்றியை எளிமையாக்கும். அவர்களின் ஒற்றுமையை உடைக்க முடிந்தால், எதிரியை வீழ்த்துவது எளிமை.
எதிரியை நேரடியாக எதிர்க்க வேண்டும் என முடிவு செய்த பின்னர் உங்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்து எதிரிகளுக்கு புரியாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதாவது எதிரியின் மன நிலையில் இருந்து சிந்தித்து அதற்கு மாறாக காய்நகர்த்த வேண்டும் என்கின்றார் சாணக்கிர்.
இந்த வியூகங்களை சரியாக பின்பற்றினால் நிச்சயம் எவ்வளவு பலம் வாய்ந்த எதிரிகளையும் எளிமையாக வீழ்த்திவிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |