மின்னல் வேகத்தில் கொழுப்பை கரைக்கும் பேரிச்சை... ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடனும் தெரியுமா?
பேரிச்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என நிறைய பேர் ஒதுக்கி விடுவார்கள்.
உண்மையை சொன்னால் சர்க்கரை வியாதி இருப்பவர்களும் பேரிச்சை சாப்பிடலாம்.
4 பேரிட்சை எப்படி உடல் குறைக்க உதவும் என்று பார்க்கலாம்.
இந்த படத்துல முதல்ல இந்த உருவம் தெரிந்தால் நீங்கள் இப்படி பட்ட அதி புத்திசாலியாம்!

4 பேரிட்சை எப்படி உடல் குறைக்கும்?
வெளி நாடுகளில் பேரிச்சை டயட் என்றே பெயரிட்டு அதனைபின்பற்றி உடல் எடையை குறைக்கிறார்கள்.
உங்கள் உடல் எடையை குறைக்கும்படி மிக எளிதான டயட் ஒன்று உள்ளது.
தினமும் 4 பேரிச்சை காலை 2 மாலை 2 என சாப்பிட வேண்டும். அதனை சாப்பிடும் முறையை பார்க்கலாம்.

தேவையானவை
- பேரிட்சை -2
- பசும் பால்- 1 கப்
- மஞ்சள் - 1 சிட்டிகை
- தேன் - 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
பின்னர் இரண்டு பேரிச்சைப் பழத்தை சாப்பிட வேண்டும்.
இது போலவே இரவும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்யும்போது 15 நாட்களிலேயே உங்களுக்கு பலன் தெரிய ஆரம்பிக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க.
எவ்வளவு சாப்பிடலாம்?
பேரிச்சம் பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதும், அதேபோல இரும்புச் சத்து அதிகம் கொண்டதால் பேரிச்சம் பழம் நிறைய எடுத்துக் கொள்ளலாம் என்று பேரிச்சம் பழம் பற்றி நிறைய கருத்துகள் நிலவுகின்றன.
பேரிச்சம்பழம் அதிக இனிப்பு சுவை கொண்ட ஒரு பழம். அதை எதற்காக சாப்பிடுகிறோம், யார் சாப்பிட வேண்டும் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம்.

உடல் எடை குறைக்க நினைக்கிறவர்கள் பேரிச்சம்பழம் மட்டுமல்ல, வேறு எந்த ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியமாகும்.
நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களாக இருநதால் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டோடு நிறுத்திக் கொள்வது நல்லது.
சாலட் அல்லது வேறு ஸ்வீட்டுகள் செய்கிற போது பேரீச்சை பழத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
அதனால் அந்த ரெசிபியில் இயல்பாக சேர்க்கும் சர்க்கரையின் அளவும் குறையும். ஒரு கிளாஸ் சூடான பாலில் பேரீச்சை பழத்தை போட்டு ஊற வைத்தும் சாப்பிடலாம்.
தயிர், சட்னி, கேக் என பல வகை உணவுகளிலும் பேரீச்சை பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். அதேசமயம் அளவோடு சேர்க்க வேண்டும் என்பதையும் மறக்கக் கூடாது.