Bigg Boss போக ஆசை இருக்கா? இவர்களிடம் கேட்ட சான்ஸ் கிடைக்கலாம்- முயற்சித்து பாருங்க
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி போட்டியாளர்களை தெரிவு செய்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8
பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
இப்படியொரு நிலையில் திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனை அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி வட்டாரங்களை துருவிய போது நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் தொடங்கி விட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சினிமா, டிவி நட்சத்திரங்கள், சோஷியல் மீடியா இன்ஃப் ளூயன்சர் எனப் பல தரப்பிலிருந்து சிலரது பெயர்கள் டிக் செய்யப்பட்டு சேனல் தரப்பு அவர்களை அணுகி வருவதாகச் சொல்லப்படுகிறது.

போட்டியாளர்கள் எப்படி தெரிவு செய்வார்கள் தெரியுமா?
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் சிலர் பிரபலங்களின் சிபாரி அடிப்படையில் தான் தெரிவு செய்வார்களாம்.
இதனை பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர்கள் வெளியில் வந்தவுடன் பேட்டிகளில் கூறியிருப்பார்கள்.
இதன்படி, பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி சிபாரிசுப்படி அமீரின் தங்கை ஐஷு கலந்துகொண்டார்.

அதே போன்று பிக் பாஸ் சீசன் 4ல் இரண்டாவது இடம் பிடித்தவரும் ஒ.டி.டி. பிக் பாஸில் டைட்டில் வென்றவருமான பாலாஜி முருகதாஸின் சிபாரிசிலேயே அனன்யா கலந்துகொண்டார்.
சில சமயங்களில் விஜய் டிவியில் நடிக்கும் நடிகர், நடிகைகள் சிலருக்குக் கூட இந்த விஷயத்தில் சேனலில் செல்வாக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |