ஹோட்டல் ஸ்டைலில் பனீர் மசாலா தோசை... போட்டி போட்டு சாப்பிடுவாங்க
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் தோசையில் ஹொட்டல் ஸ்டைல் பனீர் மசாலா தோசை செய்வதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை பிடித்தமான உணவு என்றால் அது தோசை தான். தோசையில் பல வகைகள் இருக்கின்றன. இந்நிலையில் ஹோட்டல் ஸ்டைலில் பனீர் மசாலா தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தோசைமாவு - தேவையான அளவு
பன்னீர் - 2 கப் (துருவியது)
குடை மிளகாய் - 1(பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
வெண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
உப்பு, நெய் - தேவையான அளவு
செய்முறை
பனீர் மசாலா தோசை செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்க்கவும்.
பட்டர் உருகியதும் இப்போது அதில், பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து அதில் நறுக்கி வைத்த தக்காளி சேர்க்கவும் தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில், துருவிய பன்னீர், தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இப்பொழுது பன்னீர் மசாலா தோசை செய்வதற்கான மசாலா தயாராகிவிட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |