ஹொட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்த கணவர்: தற்கொலை செய்த மனைவி! இடையே நடந்தது என்ன?
வீட்டில் தான் சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிடாமல் ஓட்டலில் இருந்து உணவு வாங்கிட்டு வந்து கணவன் சாப்பிட்டதால் மன உளைச்சலில் இருந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்பே கோன் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அம்பேகோன் பகுதியை சேர்ந்தவர் ப்ரதிக்ஷா சரவ டேக்கும்(23) காஹினிநாத் சரவடேவுக்கும்(33) கடந்த 2019 ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னர் சில மாதங்கள் கழித்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் அதேபோல் தகராறு ஏற்பட்டதால், ப்ரதிக்ஷா சமைத்து வைத்த இரவு உணவை சாப்பிட கூடாது என்ற முடிவில் வீட்டிற்கு வரும்போது ஓட்டலில் இருந்து பானிபூரி வாங்கி வந்திருக்கிறார் காஹினிநாத்.
வீட்டில் நான் சமைத்து வைத்திருக்கும் போது எதற்காக ஓட்டலில் இருந்து உணவு வாங்கி வரவேண்டும் என்று ப்ரதிக்ஷா கேட்டதால் மேலும் கணவன் மனைவி இடையே சண்டை வலுத்து இருக்கிறது. நீ சமைச்சு வைக்கும் சாப்பாட்டை சாப்பிட எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் ஓட்டலில் இருந்து வந்து வாங்கிட்டு வந்து சாப்பிடுகிறேன் என்றது, அதை நினைத்து நினைத்து மன உளைச்சலில் இருந்து இருந்திக்கிறார்.
இதனால் மறுநாள் விஷம் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். விஷம் குடித்துவிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது குடும்பத்தார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்திருக்கிறார் இதையடுத்து ப்ரதிக்ஷாவின் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.