முதல் முறையாக கேமராவின் முன் மனந்திறக்கும் பிரியங்கா! என்ன சொல்லியிருகிறார் தெரியுமா?
காதலை பற்றி ஒரு சரியான விளக்கம் கொடுத்த தொகுப்பாளர் பிரியங்காவின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரியங்காவின் தொகுப்பாளர் பயணம்
பிரபல தொலைக்காட்சியில் டிடிக்கு இணையாக தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா.
இவரை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்தளவு மக்களை என்டர்டைம் செய்யக் கூடிய ஒரு தொகுப்பாளர்.
இதனை தொடர்ந்து பிரியங்காவின் நிகழ்ச்சிகளில் மாகாபா ஆனந்தின் பங்கு நிச்சயமாக இருக்கும்.
இவர் தொகுப்பாளர் மட்டுமல்ல பாடகர், யூடியூப்பர், பிக்பாஸ் போட்டியாளர், என பல வழிகளில் தன்னை விரிவுப்படுத்தி வைத்திருக்கிறார்.
காதலுக்கு சரியான விளக்கம் கொடுத்த பிரியங்கா
இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா அவரின் வேலையிலும் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் சமிபத்தில் காதலுக்கு சரியாக விளக்கம் கொடுக்கும் வீடியோக்காட்சியொன்று வைரலானது.
அதில்,“ காதலை நாம் ஒருவருக்கு கொடுக்கும் போது அவரும் கொடுக்க வேண்டும் என அவசியம் இல்லை. காதலை ஒரு வழியிலும் கொடுக்கலாம்.” என கூறியிருந்தார்.
இதனை பார்த்த இணையவாசிகள், பிரியங்காவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்ததுடன்,“ இவர் மறைமுகமாக அவரின் திருமண வாழ்க்கை குறித்து பேசுகிறாரா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.