மருத்துவமனை கழிப்பறையில் பெண் செய்த மோசமான வேலை: பரிதாபமாக பறிபோன உயிர்
தவறான முறையில் பிறந்த குழந்தையை மருத்துவமனை கழிவறைக்குள் வைத்து கொலை செய்துள்ள பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவின் கொச்சியில் உள்ள வயநாடு பகுதியில் 20 வயது பெண் ஒருவர் தனது தாயுடன் வசித்து வந்த நிலையில், வாலிபர் ஒருவர் பெண் ஒருவரை தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார்.
பல நாட்கள் வாலிபரிடம் தப்பித்து வந்த பெண் சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபரிடம் தனியாக சிக்கிய நிலையில், அந்த வாலிபர் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த பெண், கருவை கலைக்க முயன்றும் முடியாமல் போனதால், இறுதியில் குழந்தையை சுமந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயாருடன் கடந்த வாரம் மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு பெண்ணை காத்திருக்க கூறிய போது, பிரசவ வலி ஏற்பட்ட போது மருத்துவமனை கழிவறைக்கு சென்றுள்ள நிலையில், அங்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.
பின்பு குழந்தையை கழிவறையிலேயே குதறி டாய்லெட்டில் போட்டு தண்ணீரை ஊற்றி பிளஷ் செய்து விட்டு, ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார்.
குறித்த டாய்லெட்டுக்குள் சென்ற ஒரு நபர் அங்கு இறந்த குழந்தையின் எச்சங்களை பார்த்து புகார் செய்த நிலையில், பொலிசார் குறித்த பெண்ணை விசாரிக்க அழைத்துச் சென்றுள்ளனர்.