ஒரு மாதத்தில் உடல் எடை சரசரவென்று குறைய வேண்டுமா? இந்த கஞ்சியை காலையில் குடிங்க
உடல் எடை என்பது தற்போது இருக்கும் மக்களின் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் நோய் தொற்றுக்கள் வரும் பல பிரச்சனைகள் சேர்த்து வரும்.
உடலில் கெட்ட கொழுப்பு தேங்கி நிற்கும் போது அது உடலில் பெரும் ஆபத்தை அதிகரிக்கும். இந்த பிரச்சனைக்கான ஜிம் சிலர் செல்கின்றனர்.
ஆனால் ஜிம் செல்ல நேரம் இல்லாதவர்கள் இந்த கஞ்சியை காலையில் தினமும் குடிக்கலாம். அப்படி குடிக்கும் போது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை இது குறைத்து எடை இழக்க உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு - அரை கப்
- பார்லி அரிசி - அரை கப்
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- இஞ்சி - ஒரு துண்டு
- பூண்டு - ஐந்து பல்
- வெங்காயம் - 1
- கேரட் - 1
- பீன்ஸ் - 1
- வெண்ணெய் - அரை ஸ்பூன்
- தண்ணீர் - 2 டம்ளர்
- உப்பு - தேவைக்கேற்ப
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் உரு பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் சோ்க்காமல் வெறுமையாக சூடாக்கி கொள்ளு மற்றும் பார்லியை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மிளகு சீரகத்தையும் வாசம் வரும் வரை வறுத்து எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் வெண்ணெய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டை வாசம் போகும் வரை வதக்கிய பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வெந்ததும் கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும்பொடியாக்கி வைத்திருக்கும் கொள்ளு, பார்லி அரிசி, மிளகு, சீரக கலவையை அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
பின்னர் மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி கொஞ்சமாக கறிவேப்பிலை கொத்தமல்லி இலை தூவினால் சுவையான கொள்ளு பார்லி கஞ்சி தயார். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை தானாக குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |