மிதுன ராசியில் உருவான திரிகிரஹி யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார்?
மிதுன ராசியில் உருவான திரிகிரஹி யோகத்தால் அதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.ஜூன் 12ஆம் தேதி மாலை 6:15 மணிக்கு மிதுன ராசியில், சுக்கிரன் பெயர்ச்சி ஆகியுள்ளார்.
ஜூன் 14ஆம் தேதி இரவு 10:55 மணிக்கு புதன், மிதுனத்தில் பெயர்ந்துள்ளார். இந்த காரணத்தினால் மிதுன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகியிருக்கிறது. இதனை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
நீங்கள் எப்போதும் சிறப்பாக இருக்கும் ஒரு ராசியினர் தான் ஆனாலும் இந்த திரிகிரஹி யோகத்தால் பணிசெய்யும் பணியிடத்தில் உயர்பதவி கிடைக்கும். இதுவரையில் வந்த கெட்டப்பெயர் நீங்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். முன்பு நீங்கள் செய்துவைத்த முதலீடுகளில் இருந்து லாபம் பெறலாம்.
மிதுனம்
நீங்கள் இந்த திரிகிரஹி யோகத்தால் இந்த காலகட்டத்தில் நிதி வரவு அதிகம் கிட்டும். பணியிடத்திலும் தொழில் செய்தும் கிடைக்கும் பணத்தை சேமிக்கக் கற்றுக் கொள்வீர்கள். இந்த கால கட்டம் உங்களுக்கு ஒரு அனுபவமாக அமையலாம். பொறுமையை அதிகம் கடைப்பிடிப்பீர்கள்.
சிம்மம்
உங்களுக்கு ந்த யோகம் வந்தது பெரம் அரிய வாய்ப்பாகும். வாழ்வில் அபரிமிதமான வாய்ப்புகளும் முன்னேற்றமும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு, பதவி உயர்வு கிட்டும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். புதிய பணியிட மாற்றங்கள் உருவாகலாம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படத்தி நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வழி வகுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |