வெந்நீருடன் இதை ஒரு சொட்டு விட்டு தினமும் வெறும் வயிற்றில் குடிங்க....எடையை சட்டுனு குறைக்கலாம்!
இன்றைய காலத்தில் எடை அதிகரிப்பு என்பது வியாதி போல உருவெடுத்துள்ளது.
எடையை குறைக்க சிரமப்படுபவர்கள் தேன் எடுத்து கொள்வதால் நல்ல பலனை பெற்று கொள்ள முடியும்.
ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது பானங்கள் மற்றும் உணவுகளில் கலந்தும் சாப்பிடலாம்.

அதிலும் தேனை வெந்நீருடன் கலந்து சாப்பிடுவது ஒரு நல்ல வழிமுறை.
இப்படி வெந்நீருடன் தேன் கலந்து சாப்பிடுவதால் எடை சட்டுனு குறையும் அதிசயம் நடக்கும். அது மட்டும் இன்றி தேனுடன் சேர்த்து எலுமிச்சையும் கலந்து குடித்தால் ஒரு வாரத்திலேயே நல்ல பலன்களை உணரலாம்.
ஒரு துளி தேன்
தினமும் காலையில் வெந்நீரில் தேனும், எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் உணவு செரிமானம் நன்முறையில் நடக்கும்.
உணவுப்பொருளை கரைக்கக் கூடிய திரவங்களை நுரையீரலில் உற்பத்தி செய்ய வைக்க இந்த முறை உதவும்.

எலுமிச்சை சாற்றையும், தேனையும் வெந்நீரில் கலந்து குடிக்கும் போது, செரிமானக் குழாய் தளர்வடையும். அதனால் உணவு அந்த வழியில் எளிதில் செல்லும்.
எடை எப்படி குறைகின்றது?
இதன் மூலம் தேவையற்ற எடை கூடுதல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். இந்த வழியில் வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்க முடியும்.
வெந்நீரை தினமும் குடிப்பதால், தினமும் சாப்பிடும் உணவின் அளவ குறைவாக இருக்கும்.

வெந்நீருடன் சேர்த்து தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை குடிக்கும் போது அதிலுள்ள நார்ச்சத்து பசியை குறைக்கவும், சர்க்கரையின் அளவை குறைக்கவும் செய்து போதுமான அளவு சக்தியை அளிக்கிறது.
எனவே தான், தங்களுடைய தினசரி வாழ்க்கையை ஒரு கோப்பை வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு குடித்து துவக்குபவர்கள் எளிதில் எடையைக் குறைத்து விடுகிறார்கள்.
