தேனுடன் மஞ்சள் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
மஞ்சள் பொதுவாக கிருமி தொற்றுக்களை நீக்க பயன்படுகிறது. இது மசாலா பொருட்களில் பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தேனில் பல வைட்டமின்கள் இருக்கின்றன. மஞ்சள் தீக்காயங்கள் முதல் சிறிய வெட்டுக்கள் வரை பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது தவிர நமக்கு மழைக்காலத்தில் வரக்கூடிய ஜலதோஷம் முதல் தொண்டை அழற்சி வரை வரை உள்ள நோய்களுக்கு தீர்வாக உள்ளது. இப்போது இருக்கும் நவீன மரந்துகளால் குண்படத்த முடியாத நோய்களை கூட விட்டு வைத்திய பொருட்கள் மூலம் குணப்படுத்தலாம்.
அப்படி ஒரு பொருள் தான் மஞ்சள் மற்றும் தேன். இது இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது உடலில் என்னென்ன மாற்றம் உண்டாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேன் மஞ்சள்
பளபளப்பான சருமம்: தேனையும் மஞ்சளையும் கலந்து சாப்பிடும் பொழுது அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் பண்புகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதன் காரணமாக நமது சருமப்பொலிவு இருந்ததை விட அதிக பிரகாசமாக ஜொலிக்கும்.
கல்லீரல் ஆரோக்கிம்: உடலில் இதயத்திற்கு பின்னர் மிகவும் முக்கியமான தொகுதி என்றால் அது கல்லீரல் தான். கல்லீரலில் நச்சுக்களை நீக்குவதன் மூலம் உடலில் பாதி நோய்கள் குணமாகும்.
இந்த நச்சுநீக்கியாக செயல்பட மஞ்சள் மற்றும் தேன் கலந்து சாப்பிடுதல் மிகவும் நன்மை தரும். இது கல்லீரலை நச்சு நீக்கி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்.
இதய ஆரோக்கியம்: தேன் மற்றும் மஞ்சள் கொலஸ்ரால் அளவை குறைக்க கூடியது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். எனவே தினமும் மஞ்சளுடன் தேனை கலந்து சாப்பிட்டால் அது கொலஸ்ரால் அளவை குறைத்து இதயத்தை பாதுகாக்கும்.
செரிமானம் மேம்படுத்துகிறது: மஞ்சள் மற்றும் தேன் கலவையானது உப்புசத்தை குறைப்பதன் மூலமும் குடலின் செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலமும் செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவும்.
அதே போல மஞ்சள் மற்றும் தேன் இரண்டும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த சிறந்த உணவுப் பொருட்கள் ஆகும். ஆக்ஸிடேட்ட்டிவ் ஸ்ட்ரஸ்ஸிற்கு எதிராக நம் உடல் போராட இவை இரண்டும் சிறந்த கலவையாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: தேன் மற்றும் மஞ்சள் இரண்டு பொருட்களுமே ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகளை அதிகம் கொண்டுள்ளன.
இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும் போது நொய்கள் எளிதில் நம்மை அண்ணடாமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |