வாரத்திற்கு இரண்டு தடவை போடுங்க.. கண்ணாடி போன்று பளபளப்பாகும்!
பெரும்பாலான பெண்கள் கொரிய பெண்களை போன்று பளபளப்பான முகம் கிடைக்க வேண்டும் என பல க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.
கொரியாவில் இருக்கும் பெண்கள் பொம்மைகள் போன்று மின்னுவதற்கு அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் காரணமாகும். சமீப நாட்களாக நிறைய பெண்கள் கொரிய பெண்களை போன்று சருமம் வேண்டும் என சந்தையில் கிடைக்கும் பல பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
வெறும் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வைத்து கண்ணாடி போன்று பளபளப்பான சருமத்தை பெற முடியாது. இது போன்ற அழகுசாதனப் பொருட்களை அதிக விலைக்கு பிரபல நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.
அந்த வகையில், அதிக விலைக்கு அழகுசாதனப் பொருட்களை வாங்க முடியாது என நினைப்பவர்கள் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு சருமத்தை பராமரித்து வந்தால் நாளடைவில் நிரந்தரமாக கண்ணாடி போன்ற பளபளப்பான சருமத்தை பெறலாம்.
அப்படியாயின், சருமத்தை பளபளப்பாகவும், வெள்ளையாகவும் மாற்றும் பேக்குகள் எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. அவகேடோ பேக்
- அவகேடோ, ஆலிவ் மற்றும் ஆயில் தேன் ஆகிய மூன்று பொருட்களை ஒன்றாக ஒரு பவுலில் போட்டு கலந்து கொள்ளவும்.
- அதன் பின்னர், அவகேடோ பழத்தின் சதையை பகுதியை நன்றாக மசித்து கொள்ளவும்.
- அந்த பேக்கை முகத்தில் தடவி சுமாராக 15 நிமிடங்கள் வரை காய வைக்கவும்.
- நன்றாக பேக் காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
- இப்படி செய்து வந்தால் முகம் பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருக்கும்.
2. ஓட்ஸ் பேக்
- ஓட்ஸ், தேன் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு, நன்றாக கலந்து கொள்ளவும்.
- அந்த பேக்கை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து விட்டு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- இறுதியாக மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்ய வேண்டும்.
3. மஞ்சள் பேக்
- மஞ்சள் , சந்தன பவுடர், ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- இந்த பேக்கை முகத்தில் தடவி நன்றாக காய விடவும்.
- அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
- இந்த பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் முகம் பார்ப்பதற்கு பிரகாசமாகவும், மென்மையாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |