காரசாரமான ரசம் குடிக்க வேண்டுமா? வீடிலேயே ரசப்பொடி இப்படி செய்ங்க
அனேகமான வீட்டில் அதிகமாக செய்யப்படுவது ரசமும் சாம்பாரும் தான். இது ஒரு சுலபமாக செய்யப்படும் ஒரு உணவாகும்.
இதை செய்யும் போதே வீட்டில் இருப்பவர்களுக்கு இதன் வாசனை மூக்கை துளைக்கும் அளவிற்கு மணம் அசத்தலாகவும் சுவை அசத்தலாகவும் செய்ய வேண்டும்.
முற்காலத்தில் இந்த சாம்பார் ரசத்திற்கான பொடியை வீட்டிலேயே தயாரிப்பார்கள். ஆனால் தற்போது பக்கெட்டில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகின்றன.
மக்கள் தங்களின் வேலையை இலகுவாக்க இதை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை. எனவே வீட்டிலேயே எப்படி சாம்பார் ரசப்பொடி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சாம்பார் பொடி செய்ய தேவையானவை
- காய்ந்த மிளகாய் - 330 கிராம்
- தனியா - 550 கிராம்
- கறிவேப்பிலை - ஒரு கைபிடி அளவு
- துவரம் பருப்பு - 50 கிராம்
- மிளகு - 20 கிராம்
- சீரகம் - 35 கிராம்
- கடலை பருப்பு - 70 கிராம்
- கட்டி பெருங்காயம் - ஒரு துண்டு
- மஞ்சள் - 35 கிராம்
- வெந்தயம் - 10 கிராம்
செய்முறை
முதலில் ஒருபாத்திரத்தை அடுப்பில் வைத்து 550 கிராம் தனியா எடுத்து எண்ணெய் ஊற்றாமல் சில நிமிடங்களுக்கு வறுக்கவும். நல்ல வாசனை வந்த பிறகு கடாயில் இருந்து எடுத்துவிடவும்.
அதே பாத்திரத்தில் 50 கிராம் துவரம் பருப்பு, 70 கிராம் கடலை பருப்பு போட்டு வறுக்கவும். இதையடுத்து ஒரு கைபிடி கறிவேப்பிலை, 20 கிராம் மிளகு, 35 கிராம் சீரகம், 35 கிராம் கட்டி பெருங்காயம் போட்டு ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும்.
இவற்றை வெளியே எடுத்துவிட்டு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 330 கிராம் காய்ந்த மிளகாய் போட்டு சிறிது நேரத்திற்கு சூடுபடுத்தவும்.
இதன் பிறகு கடாயில் வறுத்த அனைத்தையும் மிக்ஸியில் அரைக்கவும். முன்னதாக 35 கிராம் மஞ்சள் தூள் சேருங்கள். இப்போது சுவையான சாம்பார் பொடி தயார். இதை நீங்கள் கண்ணாடி போத்தலில் இட்டு பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |