60 வயதிலும் புது பிரகாசம் தரும் அரிசி மா.. யாருக்கும் தெரியாத அழகிகளின் Beauty secret
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அழகில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வார்கள்.
வயது அதிகரிக்கும் போது, சருமத்தில் பருக்கங்கள், சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். இதனை தடுப்பதற்காக தற்போது நவீன சிகிச்சை முறைகள் ஏகப்பட்டது வந்திருந்தாலும், அதனால் பலனடைபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.
50 வயது கடந்த பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பித்து விடும். என்ன தான் ஆரோக்கியமாக இருந்தாலும் சிலரின் முகம் பார்ப்பதற்கு வயதானவர்கள் போன்றே வெளியில் காட்டும்.
இளமையும் அழகும் குறிப்பிட்ட நாட்கள் வரை தான் இருக்கும் என முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள். ஆனால் தற்போது அப்படியான நிலை அல்ல. விரும்பியவர்கள் பணம் இருந்தால் அவர்களின் முகத்தை விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம்.
தன்னுடைய முகத்தில் எந்தவித சுருக்கங்களும், பருக்களும் இருக்கக் கூடாது என நினைப்பவர்கள் வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்து வைத்தியம் செய்யலாம்.

அப்படியாயின், முக சுருக்கங்களை வேறூடன் இல்லாமல் செய்யும் அரிசி மா பேஸ் பேக் எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆளி விதைப் பொடி
- வைட்டமின் ஈ
- காப்ஸ்யூல்கள்
- அரிசி மாவு
- தேன்
பேஸ் பேக் எப்படி தயாரிக்கலாம்?
முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக இருப்பவர்கள் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு எப்படி இலகுவாக வைத்தியம் செய்யலாம் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

முதலில் உங்களுக்கு தேவையான ஆளி விதைகளை எடுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் அரிசி மா, வைட்டமின் ஈ மற்றும் தேன் ஆகிய பொருட்களையும் ஒன்றாக ஒரு பவுலில் போட்டு கலந்து கொள்ளவும்.
ரோஸ் வாட்டர் இருந்தால் அதையும் கொஞ்சமாக கலந்து கொள்ளலாம். கொஞ்சம் தடினமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நன்றாக முகத்தை சுத்தம் செய்து விட்டு, அதன் பின்னர் முகத்தில் இந்த பேக்கை அப்ளை செய்யவும்.

சரியாக 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முகத்தை சுத்தம் செய்தவுடன் மாய்ஸ்சரைசர் போட்டு கொஞ்சம் மசாஜ் செய்யவும்.
இப்படி செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும். நீங்களும் இளமையுடன் நீண்ட காலம் வாழலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |