வாரத்திற்கு 2 குடிங்க அல்லது ஹேர் மாஸ்க்காக போடுங்க.. தலைமுடி உதிர்வு குறையும்!
உலக நாடுகளில் அநேகமானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்வு.
இது பல காரணங்களால் ஏற்படுகின்றது என்றாலும், உடலில் போதுமான ஊட்டசத்துக்கள் இல்லாமல் இருக்கும் பொழுதும் தலைமுடி அதிகமாக உதிர்கிறது. தன்னுடைய உடலில் எந்த வைட்டமின் குறைபாடு உள்ளது? என்பதை தெரிந்து கொள்ள முன்னர், ஏகப்பட்ட குறைபாடுகள் வந்து விடுகிறது.
தற்போது இருக்கும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களே இதற்கான முக்கிய காரணமாக அமைகிறது.
தலைமுடி கொஞ்சமாக உதிரும் பொழுது அலட்சியம் கொள்ளாது. அதனை முறையாக கவனித்து ஊக்கம் கொடுப்பது அவசியம்.
அந்த வகையில், போதுமான ஊட்டசத்துக்கள் இல்லாமல் உதிரும் தலைமுடியை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தலைமுடி உதிர்வுக்கு தீர்வு
தலைமுடி கொட்டுதல் என்பது இருபாலாருக்குமே தலையாயப் பிரச்சினையாக இருப்பதால் போலியான விளம்பரங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அதனை நம்பி பொருட்கள் வாங்கி பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
தலைமுடி அதிகமாக உதிருமானாமல் அதற்கு முக்கிய காரணம் வைட்டமின் B7 குறைபாடுதான் (பயோடின்). இதனை சரிச் செய்ய தினமும் பச்சை முட்டைகள் குடிப்பதை பழக்கமாக வைத்து கொள்ள வேண்டும்.
பச்சை முட்டையில் உள்ள அவிடின் என்னும் வேதிப்பொருள் பயோடின்னை ஜீரணிக்க விடாமல் தடுக்கிறது. முடி உறுதியுடன் இருக்க உடலுக்கு தேவையான பயோடினை வழங்குகிறது.
சோயா, பசலைக்கீரை, வாழைப்பழம், உருளைக்கிழங்கு, காளான் , பாதாம்பருப்பு இவைகளை சாப்பிட்டால் வைட்டமின் B7 சத்து உடலுக்கு அதிகமாக கிடைக்கும். முகத்தில் சிகப்பு திட்டுக்கள் காணப்பட்டாலும், B7 வைட்டமின் குறைபாடுதான் காரணம்.
சிலருக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டு, உடலில் உபாதை உண்டாகிறதா? அப்படியென்றால் உடலில் கால்ஷியம், பொட்டாசியம், மக்னீஷியம் தேவை என்று அர்த்தம். இதனை சரிச் செய்ய பாதாம் கொட்டை, பாதாம் பருப்பு, வாழைப்பழம் ஆகிய உணவுகளை அடிக்கடி சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |