முடி தாறுமாறாக கொட்டுகின்றதா? இந்த உணவுகள் எடுத்தால் போதும்
இன்றைய இளம்தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் பிரச்சினை என்னவெனில் முடி உதிர்தல் தான். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமான காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு தான் ஆகும்.
இரசாயன மற்றும் வெப்ப சிகிச்சைகள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், பிசிஓஎஸ் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் போன்ற ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஆட்டோ இம்யூன் கோளாறுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் இவைகள் அனைத்தும் முடிஉதிர்விற்கு காரணமாக அமைகின்றது. இதுமட்டுமில்லாமல் முக்கியமான ஊட்டச்சத்துக்களும் அவசியமாக இருக்கின்றது. அவ்வாறான ஊட்டச்சத்து உணவுகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
முடி உதிர்வை தடுக்கும் உணவுகள்
புரதமானது வலுவான கூந்தலுக்கு இன்றியமையாததாக இருக்கின்றது. பருப்பு, பீன்ஸ், முட்டை, பால், கோழி, இறைச்சி மற்றும் கடல் உணவுகளில் புரதச்சத்தை நீங்கள் பெறலாம்.
இரும்புச் சத்து அதிகம் கொண்ட இலைக் காய்கறிகள், பருப்பு வகைகள், விதைகள், கொட்டைகள், கோழி மற்றும் இறைச்சி இவற்றினை தவறாமல் எடுக்க வேண்டும்.
வைட்டமின் டி சத்தானது, சூரிய ஒளி, முட்டை மற்றும் கடல் உணவுகள் கிடைக்கும் நிலையில், இவை தலைமுடியை உள்ளிருந்து ஊட்டமளிக்கின்றது.
முழு தானியங்கள், பருப்பு வகைகள், இலை காய்கறிகள், முட்டை, பால், மீன், இறைச்சி, வாழைப்பழங்கள், விதைகள், வேர்க்கடலை மற்றும் கோழி வைட்டமின் பி சத்துக்கள் நிரம்பியுள்ளது.
சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய், கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, பெல் பெப்பர்ஸ், தக்காளி, கிவி மற்றும் ப்ரோக்கோலி இவற்றிலிருந்து வைட்டமின் சி சத்துக்களை நீங்கள் பெறலாம்.
முட்டை, சிக்கன், டார்க் சாக்லேட், பூசணி விதைகள், தர்பூசணி விதைகள், எள், வேர்க்கடலை மற்றும் சோயா ஆகியவை துத்தநாகம் காணப்படுகின்றது.
முட்டை, வெங்காயம், பூண்டு, முட்டைக்கோஸ், பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகள் மூலம் கந்தகம் சத்து நமக்கு ஊட்டமளிக்கின்றது.
வைட்டமின் ஈ சத்துக்களைக் கொண்ட சூரியகாந்தி விதைகள், முட்டைகள், தாவர எண்ணெய்கள் மற்றும் வெண்ணெய் பழங்களில் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |