ஹோட்டலுக்கே போகாமல் வீட்டிலே சுவையான பீட்சா செய்வது எப்படி?
இன்றைய தலைமுறையினர்களுக்கு பீட்சா என்றால் அதீத பிரியம் உண்டு. சாப்பிடாமல் கூட இருப்பார்கள் ஆனால் பீட்சாவை சாப்பிடாத இளைஞர்களே இல்லை என்று கூட சொல்லலாம்.
ஆனால் பீட்சாவை கடையில் வாங்கி சாப்பிடுபவர்கள் தான் அதிகம். ஆனால், தொடர்ந்து சாப்பிடுவது நம் உடல்நலத்துக்கு நல்லதல்ல.
எனவே வீட்டிலேயே எப்படி சுவையான பீட்சாவை தயார் செய்து சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மைதா - 4 கப் ஈஸ்ட் - 5 கிராம் சீனி - அரை தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு ஸ்டப்பிங் செய்ய: பீட்ஸா சாஸ் - தேவையான அளவு தக்காளி - ஒன்று பெரிய வெங்காயம் - 1 கேரட் - ஒன்று குடை மிளகாய் - பாதி பச்சை மிளகாய் - ஒன்று துருவிய சீஸ் - தேவையான அளவு
செய்முறை விளக்கம்
முதலில் பீட்சாவிற்கு தேவையான காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெதுவெதுப்பான தண்ணீரில், ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கிய பின்னர் ஒரு கப் மைதாவை சேர்த்து நன்கு கலக்கிக் கலவையை 10 நிமிடம் எடுத்து வைக்கவும்.
அடுத்து, 10 நிமிடம் கழித்து, 3 கப் மைதாவில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கலக்கி வைத்த கலவையை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பரோட்டாவுக்கு பிசையும் மாவை விட சற்று மிருதுவாக பிசைய வேண்டும்.
பிசைந்த மாவினை ஒரு ஈரத் துணியால் மூடி ஒரு மணி நேரம் வைத்து பார்த்தால் அது இருமடங்காக அதிகரித்து இருக்கும். மாவினை வெளியே எடுத்து மீண்டும் நன்றாக பிசைந்து, மீண்டும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
30 நிமிடம் கழித்து, அவன் ட்ரேயில் மாவை போட்டு சமமாக கையிலேயே விரித்து விடவும். ஓரங்களில் விரலால் ஒரே மாதிரியாக அழுத்தி விடவும். இப்போது பீட்சா ரெடி. பீட்ஸா மீது சாஸ் தேவையான அளவு தடவிய பின்னர் காய்கறிகளை ஒன்றின் பின் ஒன்றாக தூவவும்.
துருவிய சீஸை தேவையான அளவு பரப்பி விடவும். பின் சிறிது எண்ணெய்யை சீஸ் மேல் ஆங்காங்கே சேர்க்கவும். பின்னர் பீட்ஸாவின் ஓரங்களிலும் எண்ணெய் தடவி விடவும்.
இதனால் வேகும் போது கிறிஸ்பியாக இருக்கும். பீட்ஸா மீது சாஸ் தேவையான அளவு தடவிய பின்னர் காய்கறிகளை ஒன்றின் பின் ஒன்றாக தூவவும். துருவிய சீஸை தேவையான அளவு பரப்பி விடவும்.
அதன் பின் சிறிது எண்ணெய்யை சீஸ் மேல் ஆங்காங்கே சேர்க்கவும்.
பீட்ஸாவின் ஓரங்களிலும் எண்ணெய் தடவி விடவும். இதனால் வேகும் போது கிறிஸ்பியாக இருக்கும்.
