இனி வீட்டிலேயே செய்யலாம் அருமையான பானிபூரி
பொதுவாகவே ஏதேனும் வித்தியாசமான உணவுகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.
அதிலும் பானி பூரி போன்ற உணவுப் பொருட்கள் அனைவராலும் விரும்பி உண்ணப்படும்.
கடைகளில் தயாரித்து வைத்திருக்கும் பானி பூரிகளை வாங்கி உண்ணலாம். இருப்பினும் அதை விரும்பியவாறு வயிறு நிரம்ப திருப்தியாக உண்ண முடியாது.
ஆனால், வீடுகளில் தயாரித்து உண்ணும் பானி பூரிகளை திருப்தியாக உண்ணலாம்.
இனி வீட்டிலேயே எவ்வாறு பானி பூரி செய்யலாம் எனப் பார்க்கலாம்.
பூரி செய்வதற்கு தேவையான பொருட்கள்
மைதா மா - 1 கப்
ரவை - 50 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
பூரி எவ்வாறு செய்யலாம்?
மைதா, ரவை, உப்பு, தண்ணீர் என்பவற்றை ஒன்றாகப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் அந்த உருண்டைகளை தேய்த்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதை சிறு பூரிகளாக பொரித்தெடுக்கவும்.
உருளைக்கிழங்கு மசாலாவுக்கு தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகத் தூள் - 1/2 கரண்டி
மிளகாய் தூள் - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு
மசாலா எவ்வாறு செய்யலாம்?
உருளைக்கிழங்கை வேக வைத்து, உதிர்த்துக் கொள்ளவும்.
அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், உப்பு என்பவற்றை கலந்து மசாலா தயாரித்துக் கொள்ளவும்.
பானி செய்யத் தேவையான பொருட்கள்
கொத்தமல்லித் தழை - 1/2 கட்டு
புதினா - 1/2 கட்டு
பச்சை மிளகாய் - 4
சீரகத் தூள் - 1/2 கரண்டி
புளி - 50 கிராம்
வெல்லம் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
பானி எவ்வாறு செய்யலாம்?
புளியைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதனுடன் வெல்லத்தை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் கொத்தமல்லி, புதினா என்பவற்றை அரைத்துச் சேர்க்கவும்.
பின்பு பச்சை மிளகாய், சீரகத்தூள். உப்பு என்பவற்றை சேர்த்து அரைத்து புளித் தண்ணீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பூரியில் சிறிய துளையிட்டு அதனுள் சிறிது மசாலாவை வைத்து, பானியில் தோய்த்து எடுத்து உண்ணவும்.