கத்தரி செடி காய்த்து குலுங்கணுமா ? இதை மட்டும் கிள்ளி விடுங்க
தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய தோட்டத்தொடக்கம் செய்ய விரும்புபவர்கள் கத்தரி செடி வளர்ப்பு ஒரு சிறந்த தேர்வாகும்.
சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் முக்கிய காய்கறியாகும் கத்தரிக்காய், வீட்டிலேயே எந்த ரசாயன உரமும் இல்லாமல் வளர்த்தால், அது மனதில் மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.
சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் தரமான கத்தரிக்காய்களை வளர்த்து அறுவடை செய்ய முடியும். இது குறைந்த செலவில், இயற்கையாக உணவுக்கான காய்கறிகளை சுயமாக உருவாக்கும் ஒரு அழகான திட்டம் என்று கூறலாம்.
கிள்ளி விட வேண்டியது
பொதுவாக, கத்தரி செடிகள் பூக்கத் தொடங்கியவுடன், நாம் அதிக காய்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்போம். ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்றினால், செடிகள் சிறப்பாக வளர்ந்து அதிக அளவில் காய்கள் கொடுக்கும்.
அந்த வழிமுறைகளில் முக்கியமான ஒன்று – தரையில் இருந்து பூக்கும் முதல் பூவை கிள்ளிவிட வேண்டும். இந்த முதல் பூவை செடியிலேயே விட்டுவிட்டால், அது செடியின் ஊட்டச்சத்துக்களை அதிகமாக எடுத்துக்கொண்டு, செடியின் வளர்ச்சியைத் தடுக்கும்.
இதனால் செடி போதுமான உயரம் வளராமல், காய்கள் குறைவாக உருவாகும் அபாயம் உள்ளது. ஆகையால், ஆரம்ப பூவை நீக்குவது செடிக்கு வலிமை கொடுத்து, நன்கு கிளைகள் படைத்து, நிறைந்த காய்கள் கொடுக்க உதவுகிறது.
இந்த எளிய நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் கத்தரி செடிகள் செழித்து வளர்ந்து, எதிர்பார்ப்பதை விட அதிக காய்களைக் கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |