கருஞ்சீரகம் நல்லது தான்.. ஆனால் மறந்தும்கூட இவர்கள் சாப்பிட வேண்டாம்!
தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவை தாயமாக கொண்ட கருஞ்சீரகத்தில் அனைத்து நோய்களையும் தீர்க்கவல்லது.
ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கருஞ்சீரகத்தின் பயன்கள், எப்படி சாப்பிட வேண்டும், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பயன்கள்
வேறு எந்த தாவரத்திலும் இல்லாத தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் கருஞ்சீரகத்தில் காணப்படுகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.
இதில் உடல் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.
சுவாசப்பிரச்சனைகள், இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கருஞ்சீரகத்துக்கு உண்டு.
எப்படி சாப்பிடலாம்?
- ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும்.
- ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம்.
- ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடல் தொடர் இருமல் சரியாகும்.
- வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடுவது மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும்.
- கருஞ்சீரக பொடியுடன் நீராகாரத்தில் கலந்து 3லிருந்து 7 நாள் வரைக்கும் சாப்பிட்டு வந்தால் விஷப்பூச்சிக்கடி நீங்கும்.
- கருஞ்சீரகத்தை வெந்நீர் விட்டு அரைத்து தலைவலிக்கும் மூட்டு வீக்கத்துக்கும் மேல்பூசினால் குணமாகும்.
- 1 கிராம் பொடியை எடுத்து நீராகாரத்தோட சேர்த்து குடித்து வந்தால் குடல் புழுக்கள்லாம் வெளியேறிவிடும்.
பக்கவிளைவுகள்
நோயின் தீவிரத்தை பொறுத்து கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்வது நல்லது, தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லதல்ல என கூறப்படுகிறது.
எந்த காரணத்தை கொண்டு கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது என சொல்லப்படுகிறது.
குழந்தை பெற்ற தாய்மார்களும் அளவோடு சாப்பிட வேண்டும், கருஞ்சீரகத்துக்கு இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளதால் ஏற்கனவே குறைந்த ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.