முடி கருகருவென வேகமாக வளரணுமா? கருவேப்பிலை எண்ணெய் செய்து இப்படி தடவுங்க
மோசமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் தலைமுடி பிரச்சினை அதிகமாகி வருகின்றது.
தொடர்ந்து முடி உதிர்வதால் பெண்கள் மற்றும் ஆண்களின் தலையில் வழுக்கை, சொட்டை விழ ஆரம்பித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, வீட்டு வேலை, அலுவலக வேலைகளில் தனக்கென நேரம் கிடைக்காமல் இருக்கும் பெண்கள் கடுமையாக அவஸ்தைப்படுகிறார்கள்.
இப்படியான பிரச்சினைகளுக்கு ஆங்கில மருத்துவத்தை விட கை வைத்தியம் சிறந்தது. இது தலைமுடி ஊட்டமளித்து தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். இதனை பாட்டி வைத்தியம் என்றும் அழைப்பார்கள்.
அந்த வகையில் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தி காடு போல் முடியை வளரச் செய்யும் கறிவேப்பிலை எண்ணெய் எப்படி வீட்டில் தயாரிப்பது? அதனை எப்படி பயன்படுத்துவது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கறிவேப்பிலை எண்ணெய்
தேவையான பொருட்கள்
- கருவேப்பிலை- ஒரு கைபிடி அளவு
- எண்ணெய்- 100 கிராம்
- வெந்தயம் - 3 மேசைக்கரண்டி
தயாரிக்கும் முறை
- முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெயை ஊற்றி லேசான வெப்பநிலையில் சூடாக்கவும்.
- பின்னர் அதில் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
- சுமார் 10 நிமிடங்கள் வரை இரண்டையும் நன்கு கொதிக்க வைக்கவும்.
- எண்ணெய் இளம் பச்சை நிறமாக மாற ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் வெந்தயத்தை சேர்க்கவும். வெந்தயம் வாசனை பிடிக்காதவர்கள் தவிர்க்கலாம்.
- கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு சூடு இறங்கியதும் எண்ணெயை வடிக்கட்டி ஒரு சுத்தமான கண்ணாடி போத்தலில் போட்டு அடைத்து வைக்கவும்.
பயன்படுத்தும் முறை
- வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
- இப்படி தொடர்ந்து செய்து வந்தால், படிப்படியாக முடி உதிர்வு நின்று, முன்பே விட முடி நீளமாகவும் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |