கிறிஸ்துமஸ் பிளம் கேக் - ஆல்கஹால் இல்லாமல் அதே சுவையில் எப்படி செய்வது?
இன்னும் இரண்டே நாட்களில் கிறிஸ்தவ மக்களின் புனிதப் பண்டிகையான கிறிஸ்துமஸ் வரப் போகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பிளம் கேக் தான்.
என்ன கேக்குகள் இருந்தாலும் கிருஸ்துமஸ் கேக் என்றால் எலலோரும் விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம்.
இதை சிலர் ஆல்கஹால் வைத்து செய்வார்கள். ஆனால் இந்த பதிவில் ஆற்ககால் இல்லாமல் அதே சுவையில் எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு – 220 கிராம்,
- வெண்ணெய் – 220 கிராம்,
- நாட்டு சர்க்கரை – 220 கிராம்,
- முட்டை – 3,
- வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்,
- பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்,
- உப்பு – ½ ஸ்பூன்,
- ஏலக்காய்,
- கிராம்பு,
- பட்டை அரைத்த பொடி – 1 ஸ்பூன்,
- உலர் பழங்கள் & நட்ஸ்,
- பேரீச்சம்பழம்,
- மஞ்சள் திராட்சை,
- கருப்பு திராட்சை,
- செர்ரி,
- கிரான்பெர்ரி,
- நீல பெர்ரி,
- பிளம்,
- கிவி,
- பாதாம்,
- முந்திரி,
- வால்நட்ஸ்,
- மாம்பழத் துண்டுகள் – தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை
பிளம் கேக் செய்ய முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிய அனைத்து உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை சேர்க்க வேண்டும்.
இதனுடன் ஆல்கஹாலுக்கு பதிலாக தேவையான அளவு ஆரஞ்சு சாறை சேர்த்து, லேசாக மசித்து, நன்றாக கிளறி ஆறவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து, அதில் வெண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இதே நேரத்தில், கோதுமை மாவுடன் உப்பு, வெண்ணிலா எசன்ஸ், ஏலக்காய்-கிராம்பு-பட்டை பொடி மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், மாவு கலவையில் முட்டை கலவையும், ஆற வைத்த உலர் பழங்களையும் சேர்த்து மெதுவாக கலந்து, நன்றாக கலக்கி விட வேண்டும்.
பின் தயாரான மாவை கேக் டின் அல்லது ஓவனில் வைத்து, 160°C முதல் 170°C வரை குறைந்த வெப்பநிலையில் மெதுவாக
பேக் செய்து எடுத்தால் சுவையான கிறிஸ்மஸ் பிளம் கேக் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |