சளி இருமலை உடனே குணப்படுத்தும் நண்டு சூப்! பத்தே நிமிஷத்துல எப்படி செய்யவது?
பொதுவாக மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்டலே கடும் குளிரும் கூடவே வந்துவிடும். அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சளி, இருமல் பிரச்சினையால் பாதிக்கப்படுவதும் வழக்கம்.
குளிர் காலத்தில் சைனஸ் பிரச்சனையிலிருந்தும் நெஞ்சி சளி மற்றும் இருமளில் இருந்தும் விரைவில் விடுபட வேண்டும் என்றால் நண்டு சூப் தான் சிறந்த தெரிவு.

நண்டில் பாஸ்பரஸ் அதிகம் காணப்படுகின்றது. இது மூளையின் சிறந்த செயற்பாட்டிற்கும், பற்களை வலிமையாக்கவும் உதவுவதுடன் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
இதில், வைட்டமின் A செறிவாக இருப்பதால், கண்பார்வைக்கு பெரும் நன்மை வழங்குகின்றது.கருத்தரிக்க முயற்சி செய்யும் பெண்களுக்கும் நண்டு சூப் சிறந்த தெரிவாக இருக்கும்.

வாரத்திற்கு ஒரு முறை நண்டு சூப் குடிப்பது சிறந்த ஆரோக்கிய பலன்களை கொடுப்பதுடன் சளி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் நண்டு சூப்பை காரசாரமான சுவையில் எளிமையாக எவ்வாறு தயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
நண்டு - 500 கிராம்
இஞ்சி - 2 இன்ச் அளவு
பூண்டு - 20 பல்
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
அன்னாசி பூ - 1
வால் மிளகு - 1/4 தே.கரண்டி
திப்பிலி - 1/4 தே.கரண்டி
மிளகு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
மிளகாய் பொடி - 1 தே.கரண்டி
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு - 2 தே.கரண்டி
துளசி இலை - சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தோல் சீவிய இஞ்சி, பூண்டு, மிளகாய், சின்ன வெங்காயம், மிளகு, வால் மிளகு, திப்பிலி, அன்னாசி பூ, சீரகம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், சுத்தம் செய்து வைத்த நண்டை சேர்த்து அதோடு அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டைக் கலந்து அதோடு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள், துளசி இலைகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி சிறிது ஆறியதும் அதில் லெமன் ஜூஸையும் சேர்த்து நன்றான கலந்துவிட்டால் அவ்வளவு தான் காரசாரமான நண்டு ரசம் தயார். இந்த சூப் சளி இருமல் பிரச்சினைக்கு உடனடி தீர்வு கொடுக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |