பார்த்தாலே பசி எடுக்கும் எண்ணெய் கத்ரிக்காய் குழம்பு!
மலிவு விலையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் காய்கறிகளின் பட்டியலில் கத்தரிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2 ஆகியன செரிந்து காணப்படுகின்றது.

இது ஒரு காய்கறி வகை என அனைவரும் நினைத்தாலும் உண்மையில் அறிவியல் ரீதியில் இது ஒரு பழம் என்றே கருதப்படுகின்றது.
இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்துகார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், ஆகியனவும் கத்தரிக்காயில் நிறைந்துள்ளது.
வைட்டமின்அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கியபங்காற்றுகிறது.

அந்தவகையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் கத்தரிக்காயை கொண்டு அசத்தல் சுவையில் எவ்வாறு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2
தேங்காய் துருவல்- அரை கப்
இஞ்சி- 1 துண்டு
பூண்டு - 4பல்
கடுகு - 1/4 தே.கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
மிளகாய் பொடி - 2 தே.கரண்டி
தனியா பொடி - 1 தே.கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தே.கரண்டி
சீரகம், சோம்பு- 1 தே.கரண்டி
புளி தண்ணீர் - 1 கப்
காய்ந்த மிளகாய் -2
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கைப்பிடியளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு கண்ணடி பதத்திற்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதனுடன் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து மென்மையாக வதக்கி ஆறவிட வேண்டும்.

வதக்கிய பொருட்கள் நன்கு ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அத்துடன் தேங்காய் துருவல், சோம்பு, சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் எக்ஸ் வடிவில் வெட்டிய கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மீதமுள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் , கறிவேப்பில்லை சேர்த்து வதக்கி, அதனுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
அதன் பின்னர் புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, அதில் பொறித்த கத்திரிக்காய் சேர்த்து லேசாக வதக்கி மூடி போட்டு 5 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைக்க வேண்டும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் அருமையான சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |