Vastu Tips: வீட்டில் வறுமை தலைதெறிக்க ஓட வேண்டுமா? அப்போ வடக்கு திசையில் இதை பண்ணுங்க
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் ஒவ்வொரு பொருட்களையும் சரியான திசையில் வைத்தால் சுப பலன்களை பெறுவதுடன், தற்போது தவறான திசையில் வைத்தால் ஏற்படும் பிரச்சினை குறித்து தெரிந்து கொள்வோம்.
இந்து மதத்தில் முக்கியமாக வாஸ்து சாஸ்திரம் பார்க்கப்படுகின்றது. வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கு சில விதிமுறைகளை கடைபிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் வாஸ்துவில் வடக்கு திசையின் முக்கியத்துவம் மற்றும் அந்த திசையில் பொருட்களை வைத்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வடக்கு திசை
வாஸ்து சாஸ்திரப்படி வடக்கு திசையில் கடவுள்கள் வசிப்பதாக கருதப்படுவதுடன், மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகின்றது.
மேலும் செல்வத்தின் கடவுளான குபேரர் வடக்கு திசையில் வசிப்பதாக ஒரு நம்பிக்கை உள்ள நிலையில், இந்த திசையில் வைத்தால் தோஷங்கள் இல்லாமல் செல்வம் பெருகலாம்.
வடக்கு திசையில் கண்ணாடி வைத்தால் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வராமல் இருக்குமாம். வீட்டின் சமையலறையும் வடக்கு திசயில் இருந்தால் உணவு மற்றும் பணம் எப்பொழுதும் நிரம்பி வழியுமாம்.
வீட்டின் பிரதான நுழைவு வாயில் வடக்கு திசையில் இருந்தால் அது மங்களகரமானதாக கருதப்படுகின்றது. அதே போன்று மணி பிளாண்டை வடக்கு திசையில் வைத்தால் வறுமை நீங்கி பொருளாதாரத்தில் லாபம் கிடைக்கின்றது.
இதே போன்று துளசி செடியையும், வீட்டின் வடக்கு திசையில் வைத்தால் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவுவதுடன், தடைகள் நீங்குகின்றது.
மேலும் செல்வத்தின் கடவுளான குபேரரையும் வடக்கு திசையில் வைத்தால் சுப பலன்கள் கிடைப்பதுடன், செய்யும் தொழிலிலும் முன்னேற்றம் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |