கோடை காலங்களில் ரோஜா செடிகளை வாடாமல் பாதுகாக்க வேண்டுமா?
அனைவரது வீட்டிலும் இருக்கும் ரோஜா செடிகளை வெயிலில் இருந்து பாதுகாக்கும் சில விஷயங்களை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
ரோஜா செடிகள்
வீட்டில் அனைவரும் பூக்கள் என்று வளர்க்கும் போது ரோஜா செடிகளை வளர்ப்பது அதிகம். இந்த பூக்கள் வெயில் காலத்தில் அதிகமாக வாடி உதிர்ந்து விடுகின்றன.
அதை தடுப்பதற்கான சில வழிகளும் உள்ளன. இந்த செடிகளை முடிந்தவரை அரைநிழல் பகுதியில் வைக்க வேண்டும்.
இதற்கு இடவசதி இல்லை என்றால் பச்சை நிற நிழல் வலையை பயன்படுத்தி இந்த செடிகளை பொருத்தமான இடத்தில் வளர்க்கலாம்.
சீரான இடைவெளியில் தண்ணீர் பாச்சுவது வழக்கம். காலை ஏழு மணிக்கு முன்பே ரோஜா செடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். இல்லையென்றால் மாலை 5 மணிக்கு தண்ணீர் விடுவது நல்லது.
இந்த நடைமுறைகளை ஒரு மாதத்திற்கு பின்பற்றினால் செடிகள் நன்றாக இருக்கும் மழைக்காலங்களில் எந்தவித பிரச்னைகளும் வராமல் தவிர்க்கலாம்.
அதிகமான வெயில்ல் ரோஜா செடிகள் இருந்தால் அதன் இலைகள் எளிதில் காய்ந்து விடும். இதனால் செடிகள் வலுவிழந்து போய் விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |