சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா? உங்களுக்கான பாட்டி வைத்தியம்
தற்போதைய சூழலில் பெரும்பாலானவர்கள் சிறுநீர் கழிக்கும் போது அல்லது கழித்த பின்னர் எரிச்சலால் அவதிக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக அவர்களால் சிறுநீர் கழிக்க முடியாத ஒரு நிலை உண்டாகிறது.
அவ்வாறு சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் கூட அடக்கி வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது, இதனால் உள்ளேயே அடக்கி வைக்கும் போது நம் ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகமாகும்.
இன்னும் சிலரோ எவ்வளவுதான் அவசரமாக இருந்தாலும் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள்.
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசெளகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.
இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது உடலில் பல நோய்கள் உண்டாகிறது, மேலும், இந்த சிக்கல் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
காரணங்கள்
- உடலின் அதிக வெப்பம் நிலை. உடலில் தண்ணீர் பற்றாக்குறை.
- சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுவது.
- துரித உணவுகளை (junk food) அதிகமாக உட்கொள்வது.
- கல்லீரல் பிரச்சினைகள் காரணமாக சிறுநீர் கழிப்பதில் சிக்கல்.
- கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படலாம்.
- சிறுநீரக கல் பிரச்சினை.
தீர்வு என்ன?
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும் இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும்.
சிட்ரஸ் பழத்தின் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும், ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் பாக்டீரிய கிரிமிகளை அழிக்கவல்லது.
தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இதை உடலில் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகிவிடும்