கைமுட்டிகள் மிகவும் கருப்பா இருக்கா? இந்த பொருளை நான்கு முறை போடுங்க
நாம் என்ன தான் உடல் ழுழுக்க ஒரே நிறத்தில் இருந்தாலும் அக்குள் மற்றும் அந்தரங்க பகுதிகள் கொஞ்சம் சருப்பாக தான் இருக்கும். ஆனால் அது நம்முடைய உண்மையான நிறமல்ல.
இது தவிர சிலருக்கு கை முட்டிகள் கருப்பாக இருக்கும். இதற்கு காரணம் வேறாகும். சிலருக்கு கை முட்டிகளில் தோல் மிகவும் திக்காகி அசிங்கமாகத் தெரியும்.
சிலர் கைகளில் முட்டிகளில் அழுத்தம் கொடுப்பது கூடுதலாக இருக்கும் அதனாலும் இந்த கருமை நிறம் வரும். சிலருக்கு தோல் சுருக்கங்கள் கூடுதலாக இருந்தாலும் இந்த கருமை நிறம் வரும். எனவே இதை எளிமையாக போக்குவதற்கு என்ன வீட்டு வைத்தியம் செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

ஓட்ஸ் தயிர் கலவை
கை முட்டி மற்றும் கால் முட்டிப் பகுதிகளில் இருக்கும் கருமையைப் போக்க வேண்டும் என்றால் அதற்கு ஓட்ஸ் மற்றும் தயிர் கலவை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
ஓட்ஸ் மிகச்சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராகச் செயல்படும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் நன்கு க்ளன்ஸ் செய்வதோடு நன்கு ப்ளீச் செய்து கருமையைப் போக்கும்.
ஓட்ஸை பொடி செய்து அதோடு தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை கை முட்டிகளில் உள்ள கருமையின் மேல் அப்ளை செய்து மென்மையாக ஸ்கிரப் செய்யுங்கள்.
இதை 10-15 நிமிடங்கள் விட்டு பின்னர் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் கூட செய்யலாம். ஒரே வாரத்தில் முட்டியில் இருக்கும் கருமை நீங்கிவிடும்.

மஞ்சள், தேன், பால் கலவை - மஞ்சளில் குர்குமின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டு இருக்கிறது. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.
இதற்கு பால் மற்றும் தேன் ஆகிய இரண்டு பொருட்கள் கொண்ட கலவை தேவை.
இவை இரண்டும் சேர்ந்து நல்ல மாய்ஸ்ச்சரைஸராக செயல்பட்டு சருமததிற்கு பொலிவை கொடுக்கும்.
ஒரு பௌலில் மஞ்சள் அரை ஸ்பூன் சேர்த்து அதில் பால் மற்றும் தேன் சேர்த்துக் கலந்து கை முட்டிகளில் மற்றும் கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள்.
இதை 10 நிமிடங்கள் கழித்து மென்மையாக ஸ்கிரப் செய்யுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி செய்து வந்தால் கைகளில் உள்ள கருமை வேகமாக நீங்கும்.

க்ரீன் டீ எக்ஸ்ட்ராக்ட் - க்ரீன் டீயில் எபிகலோகேட்டசின் என்னும் வேதிப்பொருள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கருமையையும் இறந்த செல்களையும் நீக்கும் தன்மை கொண்டது.
இதன் காரணமாக இந்த க்ரீன் டீயை கருமை இடங்களில் அப்ளை செய்யும்போது மெலனின் உற்பத்தி குறைந்து கருமையாவது தடுக்கப்படும்.
இதற்கு தினமும் 1-2 கப் க்ரீன் டீ குடிப்பதோடு ஒரு சிறிய காட்டனில் க்ரீன் டீயை தொட்டு அதை கை முட்டிகளில் கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்து நன்றாக தேய்த்து தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தாலே போதும் கை முட்டிகளில் உள்ள கருமை நீங்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |