பல் வலி பாடாய் படுத்துதா? இந்த வீட்டு வைத்திய தீர்வு கொடுக்கும்
பொதுவாக தாங்கிக்கொள்ளவே முடியாத வலிகளின் பட்டியலில் பல் வலிக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால் பெரும்பாலானோர் பல் வலி வரும் வரையிலும் பல் சுகாதாரத்தை பற்றி சிந்திப்பதே கிடையாது.
அப்படி சரியான கவனிப்பு இல்லாததாலும், அதிகம் துரித உணவுகளையும் இனிப்பு பண்டங்களையும் சாப்பிடுவதாலும் பல் சொத்தை, துவாரம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
பற்களை பராமரிக்காததாலும், அவை சிதைந்து, புழுக்களால் பாதிக்கப்படுகின்றன. இதனால் பல்வலி, வாய் துர்நாற்றம், பல் உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பல்வலிக்கு தீர்வு கொடுக்கும் சில எளிமையான சிகிச்சை முறைகளை வீட்டிலேயே எவ்வாறு மேற்கொள்ளலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டு வைத்தியங்கள்
பல்வலியால் அவதிப்படுகின்றீர்கள் என்றால், உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது சற்று ஆறுதல் கொடுப்பதாக இருக்கும்.
கிருமித்தொற்றுகளை எதிர்த்து போராடும் ஆற்றல் உப்பில் அதிகடமாக இருக்கின்றது. மேலும் இது அழற்சியை தடுக்கும்.
உப்பு கலந்த தண்ணீரில் தினமும் இரண்டு முறை வாயை நன்றாக அலசி கழுவினால் பல் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதனை தொடர்ந்து கடைப்பிடிப்பதால் கிருமி தொற்றுக்களால் ஏற்படும் வாய் தூர்நாற்றத்தில் இருந்தும் பாதுகாப்பு பெற முடியும்.
பல் வலியால் அவதிப்படும் போது ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பது விரைவில் நிவாரணம் கொடுக்கும்.
அவ்வாறு செய்வதன் மூலம் அப்பகுதியில் உணர்வு குறைந்து வலியை மறக்கச் செய்யும். இறுதியாக பல்வலி வரைவாக குறைந்ததை உணரமுடியும்.
பல் வலியில் இருந்து விடுபட கிராம்பு எண்ணெய் பெரிதும் துணைப்புரியும். ஒரு காட்டன் அல்லது மென்மையான துணியை உருண்டை போல் செய்து அதில் கிராம்பு எண்ணெய் விட்டு வாயில் கடித்துக் கொள்வதால் சிறிது நேரத்தில் பல் வலி குறைய ஆரம்பிக்கும்.
அதனை ஒவ்வொரு 2 மணி நேர இடைவெளியிலும் செய்தால்பல் வலி காணாமலேயே போய்விடும் இந்த எண்ணெய் வாயில் அதிகமாக படாமல் பல்லில் மட்டும் படும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எனினும் பல்வலி மிக தீவிரமானதாக இருக்கிறது என்றால், இரண்டு நாட்களுக்கு மேலாகவும் வலி குறையவில்லை என்றால், உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |