வெயிலில் வாய் துர்நாற்றம் வருகிறதா?10 நிமிடத்தில் உடனடி தீர்வு
கோடைக் கால வெப்பம், நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை வாயை வறட்சியடையச் செய்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கான தீர்வினை தெரிந்து கொள்வோம்.
கடுமையான கோடையில் நீரிழப்பு அதிகரிப்பதால் வாய் வறட்சி ஏற்படுகிறது. இதனால் உமிழ்நீர் குறைந்து, பாக்டீரியாவால் துர்நாற்றம் உருவாகிறது.
தீர்வு என்ன?
தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் மற்றும் இயற்கை பானங்களை குடிப்பது வாய் ஈரப்பதத்தை பாதுகாக்கும்.
பல் துலக்குதல், நாக்கு சுத்தம், மவுத்வாஷ் ஆகியவை துர்நாற்றத்தை தடுக்கும்.
சிட்ரஸ் பழங்கள், ஏலக்காய், பெருஞ்சீரகம் போன்றவை வாய் ஈரத்தன்மையை ஊக்குவிக்கும்.
காஃபின், மது ஆகியவற்றைத் தவிர்க்கவும், இவை நீரிழப்பை அதிகரித்து வாய் வறட்சி மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
இரவில் தூங்குவதற்கு முன் பல் துலக்குதல், ஈரப்பதமூட்டியின் உதவி ஆகியவை உதவும்.
வாய் வறட்சியை அலட்சியமாக விட்டால் தொற்று மற்றும் துர்நாற்றம் ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
