காலில் ஊசி குத்துவது போல் வலிக்குதா? உடனே விரட்டியடிக்க இந்த இயற்கை பொருள் போதும்!
காலில் ஊசி குத்துவது போன்ற உணர்வை இன்று பலர் அனுபவிக்கிறார்கள்.
பாதங்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வுக்கான பொதுவான காரணம் நரம்பு சேதம் ஆகும். இது பெரும்பாலும் சர்க்கரை நோயுடன் தொடர்புடையது.
இருப்பினும், இதற்கு பிற காரணங்களும் உள்ளன. உங்களுக்கு பாதங்களில் குத்துவது போன்ற வலியை அனுபவித்தால், அதற்கான சில வீட்டு வைத்தியங்களை இப்போது காண்போம்.

பாகற்காய் இலை
சர்க்கரை நோயாளிகள் பாகற்காயை உண்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அதுவும் பாதங்களில் ஊசி குத்துவது போன்ற வலியை உணர்ந்தால், அதற்கு பாகற்காய் இலையை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
அதற்கு பாகற்காய் இலையை அரைத்து அந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
மஞ்சள் வைத்தியம்
மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது பல வழிகளில் உடலுக்கு நன்மைகளை வழங்குகிறது. முக்கியமாக மஞ்சள் பாதங்களில் ஊசி குத்துவது போன்ற வலியை நீக்குவதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
அதற்கு தினமும் பாலில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள். வேண்டுமானா, மஞ்சள் தூளை கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பாதங்களில் தடவலாம்.