சிறுநீரக பிரச்சனை இருக்கா? அப்போ கட்டாயம் இதெல்லாம் சாப்பிடுங்க
சிறுநீரகங்கள் (kidneys) என்பவை முதுகெலும்பிகளின் உடலின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்த உறுப்புகளாகும். இவை பின் வயிற்றுக் குழியில் அமைந்துள்ளன.
சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும்.
இது விலங்குகளின் உடலில் நிகழும் பல முதன்மையான தொழிற்பாடுகளை ஒழுங்காக்குவதில் பங்களிக்கின்றது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் பெரும் பங்களிக்கிறது.
இந்த சிறுநீரக பிரச்சனையானது வயது வித்யாசமின்றி எல்லாரையும் பாதிக்கிறது. தொடக்க நிலையில் இப்பிரச்சனையை கண்டறியப்பட்டால் இதை மருந்தால் குணப்படுத்த இயலும் இல்லையெனில் மரணமடையும் அபாயம் உள்ளது.
இதை தடுக்க உட்கொள்ளவேண்டியவை
காளிஃப்ளவர்
வைட்டமின்-சி, folate மற்றும் நார்ச்சத்துக்களானது இந்த cauliflower ல் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உருளைகிழங்கை தவிர்த்து அதற்கு மாற்றாக Cauliflower வை உட்கொள்வது சிறப்பு.
முட்டைகோஸ்
பொட்டாசியமானாது இதில் குறைவாக உள்ளதால் இது dialysis ற்கு உகந்த காயாகும்.Phyto chemical கள் நிறைந்துள்ளமையால் இதை சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் உட்கொள்ளலாம்.
பூண்டு
சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக sodium, phosphorous மற்றும் potassium நிறைந்த பூண்டு விளங்குகிறது.
மீன்
Salmon, tuna மற்றும் பிற குளிர்ந்த நீர், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள கொழுப்பு மீன்களானது சிறுநீரகத்திற்கு உகந்த உணவாகும்.
Olive எண்ணெய்
சிறுநீரகத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு இந்த Olive எண்ணெயின் Oleic acid உதவுகிறது. புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைய Olive எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
தர்பூசணி
சிறுநீரக காயத்தை தடுத்து சிறுநீரக பிரச்னையிலிருந்து விடிவுபெற தர்பூசணியில் உள்ள Lycopene உதவுகிறது.
சிவப்பு மிளகாய்
குறைந்த பொட்டாசியம் கொண்ட இச்சிவப்பு மிளகாயில் வைட்டமின்-ஏ, பி 6, சி, நார்ச்சத்துக்கள் மற்றும் போலிக் அமிலங்கள் உள்ளதால் இது சீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவக்கூடும்.
வெள்ளரிக்காய்
இரத்தத்தில் உள்ள நச்சுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்ற இந்த வெள்ளரிக்காயை தவறாமல் உட்கொள்ளவேண்டும். இந்த வெள்ளரிக்காயில் 96% தண்ணீர் சத்து காணப்படுகிறது.
பால்
பாலில் phosphorous ஆனது அதிகம் உள்ளடங்கியுள்ளதால் வெறும் பாலை தவிர்த்து,பாதாம் பால், அரிசி பால் மற்றும் Oats பால் போன்றவையானது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பீட்ரூட்
ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டிற்கு வைட்டமின்- பி 6 மற்றும் வைட்டமின்-கே உள்ள பீட்ரூட் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |