நரை முடியை இயற்கை முறையில் கருப்பாக்கனுமா? இத ட்ரை பண்ணுங்க
தற்காலத்தில் தமது உணவுப்பழக்கம் மற்றும் சூழல் மாசு காரணமாக தலைமுடி அதிகளவில் பாதிப்புக்குள்ளாகுகிறது. அதிலும் இளவயதிலேயே பெரும்பாலானவர்களுக்கு தலைமுடி நரைத்துவிடுகின்றது.
இந்த நரை முடிக்கு வண்ணம் பூசுவதற்கு சந்தைகளில் பல பிராண்டுகளில் வண்ணங்கள் (hair color) கிடைக்கின்றது.
இதனை பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் அதிகளவில் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான பொருட்களில் அடங்கியுள்ள இரசாயணங்கள் தலை முடியில் மட்டுமல்லாது உடலிலும் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.
எனவே நரை முடி பிரச்சினைக்கு இயற்கை முறையில் தீர்வு தேடுவதே சிறந்தது. அவ்வாறு இயற்கை முறையில் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நரைமுடியை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே எவ்வாறு கருப்பாக்குவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை
வெந்தய விதைகள்
நைஜெல்லா விதைகள்
வெங்காயம் தோல்கள்
கடுகு எண்ணெய்
கருஞ்சீரகம் விதைகள்
செய்முறை
2 ஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி வெங்காயத் தோல்கள், 1 ஸ்பூன் கருஞ்சீரகம் விதைகளை ஆகியவற்றை ஒரு கடாயில் சுமார் 8 நிமிடங்கள் வறுக்கவும்.
அதன் பிறகு ஆற வைத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும். இப்போது இந்த பொடியுடன் 2 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் தயார் செய்யவும்.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட பேஸ்டை கூந்தலின் வேர் பகுதியில் இருந்து முடியின் நீளம் வரை நன்றாக தடவிக்கொள்ளவும்.
ஒரு மணி நேரம் நன்றாக காயவிடவும். இந்த பேஸ்டை பயன்படுத்துவது முடியை கருமையாக்குவது மட்டுமல்லாமல், அவற்றை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்ற உதவும்.
இது முடி வளர்ச்சிக்கும் துணைப்புரிகின்றது. இதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவது நரை முடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |