முகத்தில் இருக்கும் கரும்புள்ளி குறைய வேண்டுமா?இதை செய்தால் போதும்
சூரிய ஒளி மாசு மற்றும் துசுக்களால் சருமம் பாதிக்கப்பட்டு முகத்தில் கரும்புள்ளி தோன்றுகிறது இதை எப்படி தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்கலாம்.
கரும்புள்ளி
இயற்கையாக சருமம் பொலிவோடு இருக்க இருப்பது அனைவரும் விரும்பும் ஒரு விஷயமாகும். முகத்தின் நிறம் மாநிறமாக இருந்தாலும், வெள்ளையாக இருந்தாலும், சிவப்பாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் அழகு என்பது குறையாது.
முகத்தின் அழகை கெடுப்பது முகத்தில் இருக்கும் சிறு குறைபாடுகள் தான். கடைகளில் வாங்கும் கெமிக்கல்களை விட நாம் இயற்கையாக செய்யக்கூடியவை சற்று தாமதமாக பலனை தந்தாலும் அது சருமத்திற்கு ஆரோக்கியமானது.
அந்த வகையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து, முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்க முடியும். முதலில் கரும்புள்ளிகள் நீங்க தேவையான பொருட்கள் பால் மற்றும் உளுந்து இவை இரண்டும் மட்டுமே ஆகும்.
காலையில் உளுந்து பருப்பை முகத்திற்கு தேவையான அளவு எடுத்து அதனை பாலில் கலந்து ஊறவைத்து விட வேண்டும். பிறகு மாலையில் அதனை நன்கு பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.
இந்த பேஸ்டை தடவி வந்தால் கழுத்தில் கீழ் உள்ள கருமை,கரு வளையம் ஆகியவை சரியாகி முகம் கூடுதல் பொலிவுடன் பளபளப்பாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |