என்ன செய்தாலும் நரைமுடி போகலையா? இந்த எண்ணெயை Try பண்ணி பாருங்க
நரை முடிப் பிரச்சனையால் கவலைப்படுகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிள் வீட்டு வைத்தியம் இருக்கிறது. கறிவேப்பிலையை வைத்து உங்கள் முடியை மீண்டும் கருப்பாக மாற்றலாம்.

நரைமுடிக்கு எண்ணை
பொதுவாக நரைமுடி என்பது நமது 35 வயதை கடந்தவுடன் வந்துவிடும். சிலருக்கு 50 வயதை கடந்தவுடன் வந்து விடும். ஆனால் தற்போதைய சமூகத்தினருக்கு இளம் அவயதிலேயே நரைமுடி வந்து விடுகிறது.
இதற்காக பலரும் முடிசாயங்களை வாங்கி பூசுகின்றனர். இது தற்காலிக பலனையே கொடுக்குமே தவிர நிரந்தரம் கிடையாது. அந்த வகையில் நரைமுடிக்கு சிறந்த எண்ணை ஒன்றை செய்து பூசினால் அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

எப்படி செய்யலாம்?
முதலில், கறிவேப்பிலையை நன்றாகக் கழுவி, ஈரம் போக காய வைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இரும்பு பாத்திரத்தில் தே.எண்ணெய் ஊற்றி அதை நன்றாக சூடாக்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும், கறிவேப்பிலையை அதில் போட்டு கருப்பாக மாறும் வரை வதக்குங்கள். கறிவேப்பிலை கருப்பானதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். இதை அப்படியே நன்றாக ஆற வைக்க வேண்டும்.

எப்போது பயன்படுத்த வேண்டும?
இந்த எண்ணையை வாரத்தில் நான்கு தடவை வேண்டுமானாலும் நீங்கள் தடவிக்கொள்ளலாம். இதை இரவில் தடவி அப்படியே வைத்து காலையில் நன்றாக குளிக்கலாம்.
இந்த உண்ணை நரைமுடியை கருப்பாக மாற்றும். மேலும் முடியை நன்றாக வளர்க்கும்.

பாதுகாக்கம் முறை
தயாரித்த எண்ணையை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி காற்று புகாதவாறு வைக்கலாம். இந்த எண்ணெய் தேய்த்து இரவில் அப்படியே வைத்து காலை சீயக்காய் அல்லது அரப்புத்தூள் தேய்த்து தலைக்கு குளித்து வர வேண்டும்.
இது உடனடியாக தீர்வு தராது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல முடிவு கிடைக்கும். மேலும் சுமார் மூன்று மாதங்களில் உங்கள் முடி கருமையாக மாறும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |