தப்பித்தவறி கூட இந்த செடிகளை வளர்த்து விடாதீர்கள்! உடனே தூக்கி வீசுங்க... வாஸ்து படி தவறு?
வீட்டில் கெட்ட சக்திகள் நிலவ அதிக வாய்ப்புள்ளது. அதற்கு நாம் வளர்க்கும் தாவரங்களும் ஓர் காரணமாக அமையலாம்.
இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
கற்றாழை
முட்களையுடைய கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்க கூடாது.
போன்சாய்
சிவப்பு நிற மலர்களையுடைய பொன்சாய் மரங்களை வீட்டினுள் வைக்க கூடாது.
புளிய மரம்
புளிய மரத்தில் கெட்ட சக்தி தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் புளியமரம் இல்லாமல் இருப்பது நல்லது.
இலவம்பஞ்சு
இலவம்பஞ்சு மரங்கள் வீட்டின் அருகில் காணப்படுவதும் துரதிர்ஷ்டத்தை குறிக்கிறது.
பனை மரம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பனை மரங்களை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. பனை மரம் வளர்வதைத் தவிர்த்தால் வீட்டில் வறுமை வராது என்று கூறப்படுகிறது.
குறிப்பு
வாஸ்து சாஸ்திரம்படி துளசி மற்றும் மணி ப்ளாண்ட்டை வீட்டில் வைப்பது நல்லது. இதனால் செல்வமும் நன்மையும் நம்மை தேடி தேடி வரும்.