எலும்பும் தோலுமாக மாறிய வடிவேலு! லீக்கான முதல் நாள் ஷூட்டிங் புகைப்படத்தால் பேரதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
நடிகர் வடிவேலு முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சில வெளியான நிலையில் இதை பார்த்து ரசிகர்கள் செம்ம ஷாக் ஆகியுள்ளனர்.
அந்த அளவிற்கு உடல் இளைத்து அடையாளம் தெரியாதபடி மாறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகள் இவரது போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பதே அபூர்வமாக இருந்தாலும், அப்படி இவர் நடித்த படங்களும் பெரிதாக இவருக்கு கை கொடுக்கவில்லை.
ஆனால் ஓவ்வொரு நாளும் மீம்ஸ் நாயகனாக வலம் வந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். தற்போது இவருக்கு சினிமாவில் விடிவு காலம் பிறந்தது போல், இவருக்கு போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டு அடுத்தடுத்த படங்களில் பிஸியாகியுள்ளார்.

இரண்டு படங்களில் மட்டுமே நாயகனாக நடித்து விட்டு, பின்னர் காமெடி நாயகனாகவே தொடர்வேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் முதல் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என்று சொன்னது போல், ஷூட்டிங்கிற்கு வடிவேலு வந்த புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.
ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஒல்லியாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியோடு உங்களுக்கு என்ன ஆனது என அக்கறையோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.