துருக்கியில் வரலாறு காணாத நிலநடுக்கம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: சீட்டுகட்டு போல் சரியும் கட்டிடம்
கடந்த கால் நூற்றாண்டாக துருக்கி பல பயங்கர நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போயுள்ளது.
நிலநடுக்கம்
சிரியா எல்லையின் தென்கிழக்கே, துருக்கியின் ஒரு பகுதியான காசியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் இன்று அதிகாலை 3:20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் 7.8 அளவில் பதிவாகியிருக்கும் இந்த அதிபயங்கர நிலநடுக்கத்தை அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் உறுதிசெய்திருக்கிறது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால், அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் விழுந்தன.
பதற வைக்கும் காட்சி
அதில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது வரையில் நிலநடுக்க பாதிப்பால் 1700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து 7.8 மற்றும் 6 என்ற ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மிகப்பெரிய கட்டிடங்கள் தரைமாட்டமான காட்சிகள் வெளியாகியுள்ளது.
Breaking ⚡️⚡️Back to back two more #earthquake s M7.8 and M6, jolts central #Turkey and ##Syria causing huge catastrophe to the already badly effected earthquakes. Reportedly more thn 2000 people dead. Billions worth of infrastructure destroyed. pic.twitter.com/ZS5Wf6bmjs
— Megh Updates ?™ (@MeghUpdates) February 6, 2023