இலங்கையில் தங்க கோபுரமா? பொக்கிஷங்கள் நிறைந்த அரிய இடம்... ஒரே ஒரு முறையாவது சென்று வாருங்கள்!
இலங்கையில் உள்ள பொலன்னறுவையில் 4 தலைமுறையாக ஒரு இராச்சியமாக இருந்தது.
இன்றைய தலைமுறையினர் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
கட்டாயம் இது குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு பொலன்னறுவை சென்றால் இவற்றை எல்லாம் பார்த்து ரசித்து விட்டு வாருங்கள்.
அவற்றில் சிலவற்றை பற்றி நாம் பார்ப்போம்.
பொலன்னறுவை வட்டதாகய
சந்திரவட்டக்கல் மற்றும் காவற்சிலைகளுடன் இருக்கும் தூபியின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கட்டிடமே வட்டதாகய ஆகும். இந்த வட்டதாகயவை சுற்றி காணப்படும் புத்தர் சிலைகளில் இரண்டு மாத்திரமே தற்போது நல்ல நிலையில் உள்ளன.
ஹெட்டதாகய
வட்டதாகயவிற்கு முன்னால் உள்ள ஹெட்டதாகய நிசங்கமல்ல மன்னனால் கட்டப்பட்டது. அருகிலேயே நிசங்கமல்ல மன்னனின் பெரிய கல்வெட்டு ஒன்றும் உள்ளது.
இதில் ராஜ நிர்வாகத்தை பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. இதன் நிர்மாணப்பணி 60 மணித்தியாலங்களுக்குள் நிறைவுபெற்றதாலேயே இது ஹெட்டதாகய என அழைக்கப்படுவதாக நிர்மாணக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரன்கொத் விகாரை
ரன்கொத் விகாரை நிசங்கமல்ல மன்னனால் கட்டப்பட்டதென கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இங்கு தங்க கோபுரம் இருந்ததால் இது ரன்கொத் விகாரை என அழைக்கப்பட்டதாம்.
திவங்க சிலை
மனை இலங்கையின் பழங்காலத்து ஓவியங்கள் திவங்க சிலை மனையில் இன்னும் காணப்படுகின்றன பல்லவ கட்டிடக்கலை சிறிதளவும் வெளிப்புற கட்டிடக்கலை இந்து மரபுப்படியும் தெரிகின்றது. வெளிப்புற சுவர்களில் சிற்பங்கள், தெய்வங்கள், நெகிறோமென்சர்கள், குள்ளர்கள் மற்றும் சிங்கங்கள் போன்ற இன்னும் பல காணப்படுகின்றன.
கிரி விகாரை
கிரி விகாரை, கல் விகாரையை பார்வையிட செல்லும் வழியில் காணக் கூடிய அரிய பொக்கிஷம்.
கல் விகாரை
இது பிற வழிப்பாட்டுத் தல பக்தர்களாலும் மதிக்கக்கூடிய புனித இடமாக கருதப்படுகின்றது. இங்கே உள்ள புத்தர் சிலைகள் தனிப்பெரும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது.
பராக்கிரமபாகு மாளிகை மற்றும் ராஜ சபை
தரைமட்ட மேடையில் கல்தூண்கள் அமைக்கப்பட்ட இடம் பராக்கிரமபாகு மன்னரின் நீதிமன்றமாக கருதப்படுகிறது. சுவர்களில் காணப்பட்ட செதுக்கல்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பொலன்னறுவை அருங்காட்சியகம்
பொலன்னறுவை அருங்காட்சியகம் பொலன்னறுவைக் காலத்து வளமான வரலாற்றை உள்ளடக்கியுள்ளது. இக்காட்சியகம் தீவு பூங்காவிலிருந்து சற்று தொலைவில் பராக்கிரம சமுத்திரத்தின் அருகில் அமைந்துள்ளது.
லங்கா திலக விகாரை
லங்கா திலக விகாரை பொதுவாக மூன்று மாடி உயரங்களைக் கொண்டது. இங்கே புத்த பெருமானின் சிலையின் எச்சங்கள் இன்னும் உள்ளன.
இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொலன்னறுவைக்கு சென்றால் இந்த இடத்தை ரசித்து புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.